siruppiddy

26/11/15

இறைவன் ஆனான் பிரபாகரன் இறந்து போனான்.ஆறுமுகன்!

ஆசியாக் கண்டத்தின்
உச்சத்தில் உதித்த
ஈழத்துச் சூரியன்!
அச்சத்தில் மூழ்கிய
அப்பாவித் தமிழரின்
விலங்கினை உடைத்து
உலகின் உச்சத்தில் வைத்த
உன்னதத் தலைவன் இவன்

பிரித்தானிய வெள்ளையனுக்குப் பின்
தமிழனை சிங்களக் கொள்ளையன்
அடிமைப் படுத்தி ஆண்ட போது…
இலங்கைத் தலையின் மூளையில்
வல்வைத் தாயின்…
வீரத் திரு வயிற்றில்
உலகத் தமிழர்களின்…
ஒட்டு மொத்த மூளையாக
உயிராகி… உருவாகினான்..

கார்கால மழையில் – ஓர்
கார்த்திகை நாளில்
இருட்டியது ஊர்…
இருபத்தி ஆறு நன்னாளில்
எடுத்தது வீரத்தாய்க்கு வலி!
பிறந்தது தமிழுக்கு வீரப்புலி!
அன்று – உருவானது
தமிழர்களுக்கான புதிய வழி!

இலங்கைத் தலையில் பிறந்து
தமிழர்களின் மூளையானன்!
ஐம்பத்து நான்காம் ஆண்டிலிருந்து…
மூலையில் முடங்கிக் கிடந்த
ஈழத் தமிழர்களுக்கு
புதிய அத்தியாயமும் தொடங்கியது!
புதிய பாதையும் பிறந்தது!!

இரத்தச் சேறில் புதைந்த
தமிழர்களின் நிலையினையும்…
பரல் தாரில் அவிந்த
குழந்தைகளின் உயிரினையும்…
வலி நிறைந்த
வார்த்தைகளால் கேட்டு…
தன் இதய வலிகளால் சுமந்தான்!
தலைகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் சொத்துக்கள்
நொறுக்கப்பட்டும் – பெண்களின்
மானங்கள் பறிக்கப்பட்டும்
புனித உயிர்ப்பைகள் நிரப்பப்பட்டும்
தாய்மை மார்புகள் அறுக்கப்பட்டும்
தமிழர்களின் உடலங்கள் அறுக்கப்பட்டு
மாமிசங்களாக்கப்பட்டும் – வீதியோரக்
கடைகளில் விற்கப்பட்டதையும்
முகவரிகளே இல்லாமல்
அழிக்கப்பட்டதையும்…
பார்த்தும், படித்தும், கேட்டும்
பதறித் துடித்துப் போய்
பதினான்கு வயதினிலே…
பிறந்தது நெஞ்சத்தில் வலி!
சிங்களனைக் கூண்டோடு அழிக்க
பதினேழு வயதினிலே…
உறுமிப் பாய்ந்தது புதிய புலி!
நீங்கியது தமிழர்களைப் பிடித்த பிணி!
துவங்கியது…
சிங்களவனுக்கு ஏழரைச் சனி!!

தாழ்ந்து போன தமிழன் எழுந்தான்!
எழுந்து வந்த தமிழன்…
உலகினில் உயர்ந்தான்!
புலியாகிப் பொங்கி எழுந்து பாய்ந்தான்!
பலியாகிப் போய் மடிந்தான் சிங்களன்!
தமிழர்களின் வாழ்வில்…
பிறந்தது புதிய விடிவு!
சிங்களனுக்குத் தொடங்கியது…
துன்பமான முடிவு!!

பதுங்கியிருந்த தமிழன் பாய்ந்தான்
பிரபாகரன் பெயர் சொல்லி எழுந்தான்..!
களங்கள் பல கண்டான்…
காவியங்கள் பல படைத்தான்..!
எதிரிப்படைகளை எல்லா முனைகளிலும்
தாக்கி அழித்தான்..!
கடல் மீது ஏறியும்…
காவியங்கள் பல படைத்தான்..!
சிறகுகள் முளைத்து…
விண் மீது ஏறியும்
வானையும் சாடினான்..!
உலக ஆயுத பெரும் பலத்தின்
முன்னால்…
மனபலத்தால் உடைத்தெறியும்
கரும்புலிகள்தனை படைத்தான்..!
எதிரி விழி பிதுங்கி
வாய் மூடி அடைத்தான்!

பொங்கி வந்த படையெல்லாம்
நொந்த படையாகின…
நொந்து போன படையெல்லாம்
இவனை ஒரு சக்தி என்றனர்..!
தம்மைக் காப்பாற்றாத
சாமி எல்லாம் எதற்கு என்றனர்..?

இலங்கைத் தலைநகரத்தின்
தலையில் ஏறி
உலுக்கிய போதுதான்…
உலகமே உணர்ந்தது,
இவன் மனிதப் பிறவியல்ல…
கடவுள்களின் அவதாரம் என்று!!!

ஆறடி அணுகுண்டு இவனை
அனுசரித்துப் போனால்தான்…
பலனுண்டு என
பயந்தது இரக்கமற்ற இலங்கை!!
பணிந்தது வல்லாதிக்க வல்லரசுகள்!!!

தமிழனின் வீரம்
உலகறிந்த காலம்…
தமிழர்களுக்கென உருவாகியது
உலகினில் புதிய கோலம்..!
உலகறியாத் தமிழனையும்
உயரத்தில் பார்த்தது உலகம்..!
தமிழனின் தனி வீரமும்
புதிய தனித்துவமான அடையாளமும்
உலக வரலாற்றில் பதிந்து போனது!
இதுதான், பிரபாகரனின் காலம்!!!

இவனைப் போன்ற தலைவன்
உலகினில் எங்கும் இல்லை!
இவனைப் போன்ற வீரத் தலைவன்
இனி பிறக்கப் போவதும் இல்லை!!
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்
அஞ்சா வீரத்துடன் பிறந்த
உலகின் ஒப்பற்ற தலைவன் இவன்!
தன் சொந்த மக்களுக்காகவே…
தனது இரத்தத்தையே
பலியிட்ட மானத்தலைவன் இவன்!!

மூலவளங்கள் இல்லாத
கண்ணீர்த் தேசத்திலே…
வீரத்தை விதைத்து
சுதந்திரக் காற்றினை
சுவாசிக்க வைத்து
மக்களின் கண்ணீரைத் துடைத்த
ஈர நெஞ்சுக்காரன்!!
இவனின் ஈர வரத்தினாலும்…
வீரத் தவத்தினாலும்…
இறைவனை மறந்து போய்
இவனையே இறைவன் எனக் கருதி
தமது நெஞ்சத்தில் இருத்தி
இதய தெய்வமாக வழிபட்டனர்…
ஈழ மக்களுடன்… உலகத் தமிழரும்!

உயிரற்ற…..
வார்த்தைகளை அள்ளி விடும்
அரசியல்வாதிகளுக்கு அப்பால்…
வருடத்திற்கு ஒரு தடவை பேசி
தமிழர்களின் கடவுளாகிப் போனான்
இவனின் உயிர் வார்த்தைகளையும்
தத்துவங்களாக…
உலகமே உள்வாங்கியது!!!
பேசாமலே இருந்து பேச வைத்தான்..!
இவன் பேசிய வார்த்தைகள்…
மந்திரங்களாகின… தமிழர்களுக்கு!
இவன் பேசாத நிமிடங்கள்…
தந்திரங்களாகின… எதிரிகளுக்கு!!

காலங் காலமாக…
கடவுள்கள் செய்யாத கடமைகளை
தன்னகத்தே கொண்டு
தரணியெங்கும் வாழும் தமிழர்களின்
தனிப்பெரும் கடவுளானான்!

அரிதாரம் பூசிய போலியான
கதாநாயகர்களுக்கு மத்தியில்…
அரிதாரம் பூசாத உண்மையான
கடவுளின் அவதாரம் இவன்!!
கொடுங்கோல் அரக்கர்களை
புதிய அவதாரம் எடுத்து…
அழித்தொழித்தான்..!
தமிழர்களின் இதய அறைகளிலும்…
வீட்டுப் பூசை அறைகளிலும்…
புதிய கடவுளாக அவதரித்து நின்றான்!

ஆறுமுகனைப் பார்த்தவர் யாருமில்லை!
பிரபாகரனைப் பார்க்காதவர் யாருமில்லை!!
உருவம் இல்லாத கடவுள்
மனிதரின் இதயங்களில் நிறைந்த மாதிரி
உருவமுள்ள எம் தலைவனும்
தமிழர்களின் இதயங்களில்…
இன்று வரையும் உயிரோடு வாழ்கின்றான்!!

இல்லாத கடவுளை
இருக்கிறார் என்கிறார்கள்…
இருக்கின்ற தலைவரை
இல்லை என்கிறார்கள்!!!
இல்லாத கடவுள் இருக்கின்ற போது…
இருக்கின்ற தலைவர்
எப்படி இல்லாமல் போனார்.
இல்லை என்று சிலரும்…
இருக்கிறார் என்று பலரும்…
சாட்சியங்கள் தேடுகின்ற
மனிதர்களின் எண்ணங்களிலும்…
தேடல் கொள்கின்ற இதயங்களிலும்…
உயிரோடு வாழ்ந்து வருகின்ற
உண்மைக் கடவுள் இவன்!!

உருவம் இல்லாத கடவுளுக்கு
சிலைகளை உருவாக்கும் இவ்வுலகில்…
உருவமுள்ள எம் தலைவனுக்கு
அழகு வார்த்தைகளால் கூட
வர்ணனைகள் செய்ய முடியாது!
அலங்கார வார்த்தைகளால் கூட
அலங்காரம் செய்ய முடியாது!!
இவ்வுலகினில் உள்ள…
எந்த வார்த்தைகளாலும்
அலங்கரிக்க முடியாத…
உலகத் தமிழர்களின்
தனிப் பெரும் கடவுளாகிப் போனான்..!
இவன் கடவுளாகிப் போனதால்…
எதுவும் செய்யாத கடவுள்
இறந்து போனான்…!
தமிழனைக் காத்து இவன்
இறைவனாகிப் போனான்!!!

எம் இறைவனை வாழ்த்த
வார்த்தைகள் இல்லை இங்கே..!
அதனால், தமிழர்களாகிய
நாம் வணங்கிக் கொள்கின்றோம்…
எம் இதயங்களின் உள்ளே!!!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக