siruppiddy

7/5/16

மீண்டும் இன்றும் நாடாளுமன்றம் சூடு பிடித்தது !

2016 நிதியாண்டிற்காக மேலதிக நிதியினை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட குறைநிரப்பு பிரேரணை சம்பந்தமாக இன்றும் பாராளுமன்றம் சூடு பிடித்திருந்தது.
இதன்காரணமாக பாராளுமன்றை தற்காலிகமாக நிறுத்திவிட்டு கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு சபாநாயகர் கருஜயசூரிய நடவடிக்கை மேற்கொண்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.
அரசாங்கத்தின் குறைநிரப்பு பிரேரணை மீதான இன்றைய விவாதத்தின் போது நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற 05 தவறுகளை அநுர குமார திஸாநாயக்க சுட்டிக் காட்டியிருந்தார்.
அதேவேளை நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரணமாக பாராளுமன்ற செயலாளர் அழுத்தங்களுக்கு உள்ளானதாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இதற்கிடையில் குறைநிரப்பு பிரேரணை ஊடாக சபையை தவறாக வழிநடத்தி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச
 கூறினார்.
இவ்வாறு சூடுபிடித்த உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்களை கட்டுப்படுத்துவதற்காக முயற்சிகள் மேற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்றைய சம்பவம் தொடர்பில் மீண்டும் ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

ஆர்.சம்பந்தன், ரவூப் ஹக்கீம், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ அகிய நான்கு பேரையும் உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பது நியாயமானதல்ல என்று அநுர குமார திஸாநாயக்க கூறினார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக