siruppiddy

20/12/13

முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

உள்ளுராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவைத்தருவதாக அமையவில்லை! -      
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அளுகையின் கீழ் உள்ள உள்ளுராட்சி மன்றங்களை நடத்தத்தெரியாதவர்கள் ஏன் தான் சுயாட்சி தனிநாடு என்று கோசம்போட்டுத்திரிகிறார்களொ தெரியவில்லை என்று எங்களை உலகம் பழிக்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று யாழில் நடைபெற்றுள்ளது இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
       
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களின் இன்றைய நிலை மன நிறைவைத்தருவதாக அமையவில்லை முதல் முதலாக தொடங்கப்பட்ட மாகாண சபை என்பதால் பல பூர்வாங்க விடயங்களில் என் கவனம் உள் நுலைந்திருந்ததால் முழுமையான கவனத்தை உள்ளுராட்சி மன்றங்களின் மீது செலுத்த முடியவில்லை.

ஒரு பக்கம் உங்களுக்கு பிரச்சனைகள் பல இருக்கும் அதே நேரத்தில் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் சுயநலம் கட்டுக்கடங்காமல் நெல்வதை நான் அவதானித்துள்ளேன்.
எமது கட்சியின் அங்கத்தினனே அவர்களுள் அடிபட்டு தமது கட்சியின் வரவு செலவுத்திட்டங்களை முறியடிக்க முன்வருகின்றார்கள் என்றால் எமது உறுப்பினர்களுள் ஏதோ ஒரு குறபை;பாடு இருக்கிறது என்று பொருள் படுகின்றது.

பொதுவாக பதவியில் இருக்கும் ஒருவருடன் ஒத்துப்போக முடியாமல் போனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வரலாம் அல்லது ஒத்துப்போகாதவர் பதிவியில் இருந்து இராஜினாமாச் செய்யலாம். ஆதைவிட்டு விட்டு எமது கட்சி சார்பில் கொண்டு வரும் வரவு செலவுத்திட்ட ஆவணத்தை முறியடித்தல் என்பது மன்னிக்க முடியாத ஒரு குற்றம்.

ஏனென்றால் அத்திட்டதில் குறைபாடுகள் இருந்தால் முன்னமே அதனைப் பேசித் தீர்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கு மாறான நடவடிக்கை எடுத்து தமது வரவு செலவுத்திட்டத்தை தாமே முறியடித்தவர்கள் வெட்கப்படவேண்டும் என்றார்.

எமது உள்ளுராட்சி மன்றங்கள் தான்தோன்றித்தனமாகப் போதிய புரிந்துனர்வில்லாமல் இதுவரை காலமும் வளர்ந்துள்ளன போரின் தாக்கமும் அவற்றின் வளர்ச்சியில் படியாமல் இல்லை கூட்டுறவு அடிப்படையில் அல்லாது இராணுவ ஆணையிடும் அடிப்படையில் உறவுகள் இருந்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது அலுவலர்களின் ஆட்சி பற்றிய அடிப்படை அறிவும் எந்தளவிற்கு இருக்கின்றது என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

மாகாண சபை உள்ளுராட்சி மன்றங்கள் போன்றவற்றின் திறன் மீள் விருத்தி செய்யப்படவேண்டிய காலம் வந்துள்ளது தவிசாளர்களின் கடமைகள் செயலாளர்களின் கடமைகள் உறுப்பினர்களின் கடமைகள் எனபலதையும் நாங்கள் அறிய முற்படவேண்டும் இது தொடர்பில் நிபுணர்களைக்கொண்டு அறிவுரைக் கருத்தரங்ககளை வழங்கவுள்ளோம்.

எமக்கு தொழில் ரீதியான முழுமையான அறிவு கிடைத்தால் மன்ற அங்கத்தவர்களை அதுவும் ஒரே கட்சியில் அங்கம் வகிக்கும் அங்கத்தவர்களை பதவி இறக்குவது போன்ற நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமாட்டோம் என்று நம்பலாம். புதவியில் இருப்பவர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். மேலும் கட்சியின் கட்டுக்கோப்பு ஒழுக்கம் கடமைப்பாடு போன்வற்றையும் கணக்கில் எடுத்து தொழிற்திறனை உறுதி செய்யலாம்.

உள்ளுராட்சி மன்றங்களை நாங்கள் தொழிற் திறனுடன் நடத்தினால் தான் எமக்கு போதிய நிர்வாகச் செயலாட்சி. மேலாண்மைத்திறன்களுந் தகுதிகளும் உண்மென்று உலகம் நம்பும் இல்லையேல் உள்ளுராட்சி மன்றங்களை நடத்தத்தெரியாதவர்கள் ஏன் தான் சுயாட்சி தனிநாடு என்று

கோசம்போட்டுத்திரிகிறார்களொ தெரியவில்லை என்று எங்களை உலகம் பழிக்கும் என்றார்.
அத்தோடு எமது கட்சி உட்பூசல்கள் வெளியில் வருவதை நாங்கள் தவிர்க்க வேண்டும் விரைவில் வடமாகாண சபையானது உள்ளுராட்சி மன்றங்களின் உட்பூசல்கள் நிர்வாகத்திறனின் குறை நிறைகள் இலஞ்ச ஊழல்கள் போன்ற பல்வேறு விடயங்களையும் ஆராயும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.

இதுவரை காலமும் பல வித இடர்களை எதிர்நோக்கிய உள்ளுராட்சி மன்றங்கள் இனியேனும் ஒற்றுமைப்பட்டு ஒன்று சேர்ந்து உண்மையான மக்கள் சேவையை ஈடுபடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக