siruppiddy

6/6/14

படுகொலை என்பதா? ஜெயலலிதா மீது இலங்கை பாய்ச்சல்!

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாக ஜெயலலிதா கூறுவதற்கு அந்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து,  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து இலங்கை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தகவல் தொடர்புதுறை அமைச்சர் கெகெலியா ரம்புக்வாலா, இலங்கை தமிழர் விவகாரம் குறித்து ஜெயலலிதா கூறும் கருத்திற்கு இந்தியாவிடம் முறையாக எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் நிகழ்ந்ததை இனப்படுகொலை என்று கூறுவது மிகவும் தவறானது என்று கூறிய அவர், மத்தியில் ஜெயலலிதாவின் ஆதரவு இல்லாமல் மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, ஈழத் தமிழர் விவகாரத்தில் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நன்றி தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக