siruppiddy

19/6/14

சீலன் வீரமரணமடைந்த மறுநாட்கள்....

எல்லோரும் வெஞ்சினத்துடன் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. மீசாலையில் சீலன் வீரமரணமடைந்த மறுநாட்கள் அவை.இயக்கத்தின் மிகப்பெரும் தூண் ஒன்று சாய்ந்ததன்  பின் வந்த மணித்தியாலங்கள் அவை. மிகவும் வெறுமையான பொழுதுகள்.சிங்களபடைகளின் மீதான கோபம் உச்சத்தில் தகித்துக் கொண்டிருந்த கணங்கள்.. அப்போது இருந்த முப்பதுக்கும் குறைவான போராளிகள் அனைவரும் பெரும் கோபத்துடன் இருந்த வேளை அது.உற்ற தோழனாக,எங்கள் எல்லோரின் மீதும் பாசமும் அன்பும் கொண்டிருந்த மிகப்பெரும் வீரனுமான சீலன் சிந்தி குருதி காய்வதற்கு முன்னரே அதற்கான பதிலை சிங்களம் அனுபவிக்க வேண்டும் என்று விழிமுழுதும் நெருப்புடன் உலாவிய தினங்கள்.
 
சீலனின் மரணத்துக்கு சரியான பதில் சிங்களத்துக்கு கொடுத்தே தீரவேண்டும் என்பதே அனைவரது மன எண்ணமாக இருந்தது. தலைவரும் அந்நேரம் தாயகத்தில் நின்றதால் நிலைமை கட்டுக்குள் இருந்தது.
 
'வீணான மோதல்களை எவரும் எந்த இடத்திலும் ஆரம்பிக்க வேண்டாம்...மோதல்வரும் சூழ்நிலைகள் ஏற்பட்டால் அந்த இடத்தைவிட்டு வெளியேறுவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும்..ஏனெனில் சீலனின் மரணத்துக்கு சிங்களம் நினைத்தே பார்த்திருக்காத பதில் தரும் செயற்பாடுகள் ஆரம்பித்துவிட்டன...' என்ற தகவல் நேரடியாக தலைவராலேயே எல்லா போராளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது..
குறிப்பாக கிட்டு, செல்லக்கிளிஅம்மான், அருணா ஆகியோருக்கு கண்டிப்பான உத்தரவாக சொல்லப்பட்டுவிட்டது.
"வலிந்து ஏதாவது செய்து ஏற்பாடுகளை குழப்பவேண்டாம்" என்று.
 

என்னவிதமான பதில் சிங்களத்துக்கு காத்து இருக்கின்றது,எங்கே, எப்போது போன்றவற்றை கேட்பது இயக்கமரபு இல்லையென்றாலும் அந்த தாக்குதலில் தாமும் இருந்தாக வேண்டும் என்ற கோரிக்கை தலைவரை சந்திக்கும் அனைத்து போராளிகளாலும் கேட்கப்பட்டே இருந்தது.ஒரு சிரிப்பு மட்டுமே அதற்கான பதில்...ஆயிரம் அர்த்தங்கள் அதற்குள்.
 
நாட்கள் ஒன்று இரண்டு நகர்ந்த நிலையில் தலைவரிடம் இருந்து ஒரு அழைப்பு.
 
'சீலன், புலேந்திரன் ஆட்கள் சாவகச்சேரியில் காயடைந்தபோது முதலில் அவர்களின் காயங்களின் நிலையை பரீசோதித்த மருத்துவபல்கலைகழக மாணவர்கள் இருவரையும் உடனே சந்திக்கவேண்டும் என்ற வேண்டுகோள்...
 
எல்லோரும் மிகமிக கடுமையான பதில் ஒன்று வரலாற்றிலேயே இல்லாத விதத்தில் உறைப்பாக சிங்களம் அலறி நொருங்கும் விதத்தில் வகையில் அமையவேண்டும் என்றும், தாக்குதல்,அதன் வீரியம்எதிரிக்கு அதிக அழிவு,என்பன பற்றியே சிந்தித்து கொண்டிருந்த போது மருத்துவபல்கலைகழக மாணவர்களை தலைவர் அழைத்தது தாக்குதலின்போது காயமடையும் போராளிகளுக்கு அவசரசிகிச்சை அளிப்பதற்கான முன்ஏற்பாடே என்றே அனைவரும் நினைத்திருந்தனர்.
 
எதற்காக என்று அறிவது கூடாது எனினும் ஏதோ ஒரு மிகமுக்கிய அலுவல் என்பதால் அவர்களும் மறுநாளே வந்தனர்.. அவர்கள் வந்த உடனேயே அவர்களுடனான சந்திப்பு நீர்வேலிப்பகுதியின் ஓரிடத்தில் தலைவருடன் நடந்தது. அவர்களும் நினைத்து வந்திருந்தது அவசரசிகிச்சைக்கான அழைப்பே என்று. ஆனால் தலைவர் மிகவும் நேரடியாகவே அவர்களுடன் கதைக்க ஆரம்பிக்கிறார்.
 

'ஒரு கண்ணிவெடித்தாக்குதலில் நாம் பாவிக்கும் வெடிகுண்டின் அதிர்வு அருகில் வசிக்கும் மக்களின் காது,மனம் என்பனவற்றில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்..'
 
'குழந்தைகளுக்கு எந்தளவுக்கு அவர்களின் கேட்கும் சக்தியை பாதிக்கும்...'
'சிறுவர்களின் இந்த வெடிஅதிர்வு என்னவிதமான பிரச்சனைகளை கொடுக்கும்'

இந்த சந்திப்பின்போது உடன் இருந்த போராளிகள் விறைத்து போய் இருந்தனர்.அட,

இந்த தாக்குதலில் எவ்வளவு அதிகமான சக்கையை( வெடிமருந்தை) பாவித்து எதிரியை சிதறடிக்கலாம் என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த அதே வேளையில் இந்த மனிதன் எதனை பற்றி சிந்தித்து கொண்டிருக்கிறான் என்று நினைத்தபோது வானமளந்து பெரு உருவமாக நின்றான் தலைவன்.
 
மருத்துவமாணவர்களும் தமது கற்கை நெறிகளில் பெற்ற அறிவை கொண்டு எத்தனை வேகமான அதிர்வு இருந்தால் காது செவிடுபடும், எத்தனை தூரத்தில் இருந்தால் என்பனபற்றி விரிவாக சொல்லினர்.
 
இந்த கண்ணிவெடி வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வலையை குறைப்பதற்கு ஏதேனும் வழியுண்டா என்றும் கேட்டறிந்தார்.

இது ஒரு சிறு சம்பவம்போலவே இப்போது தெரியும். இதற்கு பின்னால் அந்த தேசியதலைவனின் உண்மையான விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
 
அமைப்பின் முதலாவது சக்கைவெடிப்பு பயிற்சிகள் மாங்குளம்பண்ணையில் 1979ல் நடைபெற்ற போதுகூட அதில் பங்குகொண்டிருந்த அனைவருக்கும் சக்கைவெடிக்க வைக்கமுன்னர் தலைவர் எங்கிருந்தோ சில தடிகளை முறித்து அளவாக வெட்டி அதனை வாயில் கவ்வும்வகையில் கயிற்றில் கட்டி கழுத்தில் மாட்டிவிட்டவர்.
 
அதனூடு,அமைப்பின் முதலாவது கண்ணிவெடித்தாக்குதலான பொன்னாலை பாலத்தில் நடாத்தப்பட்டபோது சிறிதுதூரத்தில் நின்றிருந்த போராளிகளுக்கு மூக்கால் இரத்தம் வடிந்த நிகழ்வும் அந்நேரம் மதுரையில் நின்றிருந்த தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது ஒரு சிறு சம்பவம்போலவே இப்போது தெரியும். இதற்கு பின்னால் அந்த தேசியதலைவனின் உண்மையான விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.
 
அமைப்பின் முதலாவது சக்கைவெடிப்பு பயிற்சிகள் மாங்குளம்பண்ணையில் 1979ல் நடைபெற்ற போதுகூட அதில் பங்குகொண்டிருந்த அனைவருக்கும் சக்கைவெடிக்க வைக்கமுன்னர் தலைவர் எங்கிருந்தோ சில தடிகளை முறித்து அளவாக வெட்டி அதனை வாயில் கவ்வும்வகையில் கயிற்றில் கட்டி கழுத்தில் மாட்டிவிட்டவர்.வெடிக்கும்போது ஏற்படும் அதிர்வால் வாய்,நாக்கு என்பன கடிபடக்கூடாது என்பதற்காக..
அதனூடு,அமைப்பின் முதலாவது கண்ணிவெடித்தாக்குதலான பொன்னாலை பாலத்தில் நடாத்தப்பட்டபோது சிறிதுதூரத்தில் நின்றிருந்த போராளிகளுக்கு மூக்கால் இரத்தம் வடிந்த நிகழ்வும் அந்நேரம் மதுரையில் நின்றிருந்த தலைவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
எல்லோரையும் சம்பவங்களாக கடந்துபோகும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் திரும்பதிரும்ப அலசுவதான் தேசியதலைவரின் இயல்பு.

தவிர்க்க முடியாத வகையில் அந்த ராணுவரோந்து அணியை முழுதாக அழிப்பதற்கு ஏற்ற இடமாக திண்ணைவேலி தபாற்பெட்டிசந்தியே தெரிவு செய்யப்பட்டது.அதனைவிட வேறு இடம் எதிலும் அவர்கள் தப்புவதற்கானசாத்தியங்களே  அதிகம்.
 
ஆனாலும் மக்கள் ஆழ்ந்து உறங்கிகொண்டிருக்கும் நள்ளிரவுநேரத்தில் திடீரென கண்ணிவெடி வெடித்தால்
வீடுகளுள் இருக்கும் எமது மக்களுக்கு,அதிலும் குழந்தைகள்,சிறுவர்களுக்கு ஏதேனும் கெடுதி வந்துவிடுமோ என தேடிதேடி அதனை தவிர்க்க பல்கலைகழக மாணவர்களை அழைத்து ஆலோசனை கேட்ட தலைவரின் இயல்பு இன்று நினைத்தாலும் அதிசயமாகவே இருக்கின்றது..
எத்தகைய தாயுள்ளம் நிறைந்த தலைவன் இந்த இனத்துக்கு வாய்த்திருக்கின்றான்.
 

மருத்துவபல்கலைகழக மாணவர்களுடான சந்திப்பின் பின் திண்ணைவேலியில் வைக்க வேண்டிய கண்ணிவெடியில் அடைய வேண்டிய சக்கையின் அளவு மிகமிக குறைவானதாக தலைவரால் திட்டமிடப்பட்டது.இதனால் கண்ணிவெடியில் ஒரு இராணுவத்தினரும் இறக்க மாட்டார்கள். ஆனால் அடுத்தகணம் ஆரம்பிக்கும் சூட்டுத்தாக்குதலில்   அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதால் தலைவர் தானே அந்த இடத்துக்கு வருகிறார்.
அவரால் மட்டும் எப்படி அப்படி சிந்திக்க முடிகிறது என்று இப்போதும் நினைத்து பார்க்கிறேன்.
 
உண்மையிலேயே அவரின் இயல்பு என்பது மிகமிக மெல்லியது-மென்மையானது மென்மையான மனம் கொண்டவர்களாலே அடுத்தவர்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளை கண்டு கொதிக்கவும் போராட துணியவும் முடிகிறது என்பது உண்மைதான்.
 

இந்த இலட்சியத்துக்கான போராட்ட வடிவமாக வேறுவழியின்றி  ஆயுதப்போராட்டமே அவருக்கு முன்னால் இருந்தது.ஆயுதப்போராட்டம் ஒன்றுக்கு தியாகங்கள் மிக அவசியம்.அதிலும் உயிரை அர்ப்பணிக்கும் தியாகம் மிகவும் அவசியம்.
 
வெறும் சுயநலசேற்றுக்குள் மூழ்கி இருக்கும் ஒரு இனத்துக்குள் ஏற்கனவே வேர்விட்டு வளர்ந்திருக்கும் சில சுயநலவிழுமியங்களை அறுத்தெறிந்து அதனை தியாகம் செய்யும் மனநிலைக்கு உயர்த்தும் ஒரு மிகப்பெரும் உளவியல் முறையை அவர் கைக்கொண்டார்.
 
சில விடயங்களை,அது வலிகூடியதாக இருந்தாலும் அந்த முறைகளை அவர் மிகமிக உன்னதமாக இந்த மக்கள்கூட்டத்துள் பரவ செய்தார்.

தியாகம் ஒன்றே மிகமிக உன்னதமானது என்ற சிந்தனையை விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள்,அர்ப்பணம் என்பனவற்றின்மூலம் எமது மக்களுக்குள் பரவ செய்தார்.அதன்மூலம் பல நூற்றாண்டுகளாக சுயநல வேலிக்குள் அடைபட்டு கிடந்த மக்களிடம் பொதுவான எண்ணமும்,ஈகமும் வளர வைத்தார்.
 
அவருக்கு தெரியும் இந்த முறையில் வலிகளும்,வேதனைகளும்,இழப்புகளும் ஏராளம் என்று.ஆனாலும் இனத்தின் உளவியலை பொதுவான நோக்கம் ஒன்றை நோக்கி கட்டியெழுப்ப இதனைவிட வேறு வழியேதும் இல்லை என்பதையும் நன்கறிவார்.
 
போராட்டத்தை வளர்க்க இது முறை.ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு பொழுதிலும் எமது மக்கள்,எமது தேச குழந்தைகள், எமது சின்னஞ்சிறார் என்று அளவற்று நேசித்ததாலேயே அவர் தேசியத்தலைவனாகிறார்.

ஆம்,எல்லோரும் கண்ணிவெடியில் எத்தனைகிலோ சக்கையை அதிகமாகி அடசி எதிரியை சிதறவைக்கலாம் என்று சிந்தித்து நின்ற வேளையிலே கண்ணிவெடி வெடிக்கும்போது என் தேசத்து குழந்தைகள் திடுக்கிடுமா..காது செவிடாகுமா என்று சிந்தித்தாரே..அதுதான்..அவரால் மட்டுமே அப்படி சிந்திக்கமுடியும்...


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக