siruppiddy

22/6/14

முகாம்களை விஸ்தரிப்பதற்கு வட மாகாணசபை தடைகளை ஏற்படுத்தி வருகின்றது!-

 வடக்கில் இராணுவ முகாம்களை விஸ்தரிப்பதற்கு வட மாகாணசபை தடை ஏற்படுத்தி வருவதாக காணி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடக்கின் இராணுவ முகாம்களை விஸ்தரிக்க காணிகளை வழங்குவதற்கு காணி அமைச்சு இணங்கியுள்ளது.
எனினும்,  இந்த நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.
முகாம்களை அமைப்பதற்காக அரசாங்கம் காணிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மக்களை ஆத்திரமூட்டி, இல்லாத அதிகாரங்கள் இருப்பதனைப் போன்று வட மாகாண சபையின் சில அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அரசியல் லாபமீட்டுவதே இந்த அரசியல்வாதிகளின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் கிடையாது என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமோ அல்லது மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமோ காணிகளை சுவீகரிப்பதற்கோ அல்லது காணிகளை வழங்கவோ மாகாண சபைகளுக்கு அதிகாரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக