siruppiddy

27/5/15

சுவிஸ் குமார் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்பு !

புங்குடுதீவில் மாணவி கொலைசெய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் . இவர் ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸாருக்கு நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டமையானது யாழில் பதற்றம் ஏற்பட காரணமாக அமைந்திருந்த தாக விசேட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மாணவியின் கொலை தொடர்பில் ஆரம்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்பின்னர் கொலையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுவிஸ் குமார் உட்பட 6 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். எனினும் சுவிஸ் குமார் மட்டும் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாகவும் புங்குடுதீவு பொலிஸ் அதிகாரிகள் சிலருடன் இவர் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பே இதற்கான காரணம் எனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் அடிக்கடி பொலிஸாருக்கு 'மது விருந்துகள்' போன்றவற்றையும் வழங்கி வந்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.
இதன் பின்னர் மக்கள் ஆர்ப்பாட்ட த்தில் இறங்கியமையும் அதனைத் தொடர்ந்து அவர் வெள்ளவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் சுவிஸ் குமார் நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் யாழில் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லையென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக