siruppiddy

9/5/15

களமிறங்கும் மஹிந்தவுக்கு எதிராக மற்றுமொரு குழு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டால்,  அதற்கு எதிராக போட்டியிட மற்றுமொரு தரப்பு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார்கள்.
தங்களுக்கும் பிரதமர் வேட்பாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சிரேஸ்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுப்பார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது எந்த சந்தர்ப்பத்திலும் பிரதமர் வேட்பாளர் ஒருவரை சுதந்திரக் கட்சி பெயரிட்டதில்லை.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதனை சுதந்திரக் கட்சி தேர்தலின் பின்னரே தீர்மானிக்கும்.
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியும் இதே வழிமுறையை பின்பற்றுவார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருடையதும் தனிப்பட்ட சொத்து கிடையாது.
நாட்டின் தேவைகளையும் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையிலுமே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி என்ற ரீதியில் வெற்றியீட்டுவதே எமது நோக்கமாக அமைந்துள்ளது.
மாறாக தனியொரு நபரை மன்னராக்குவது எங்களது நோக்கமல்ல என எஸ்.பி. நாவீன்ன சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக