siruppiddy

12/3/15

ஜெயில்களில் உள்ள 86 தமிழக மீனவர்களும் விடுதலை

 பிரதமர் மோடி பயணத்தை முன்னிட்டு சிறிசேனா உத்தரவு
.இலங்கை ஜெயில்களில் உள்ள 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
கைது
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 86 பேரை கடந்த மாதம் 26–ந் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இரண்டு குழுக்களாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது 10 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரவு
இந்நிலையில், 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று உத்தரவிட்டார். தற்போது, 4 நாள் பயணமாக லண்டனில் உள்ள அவர், அங்கிருந்து இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதே போன்ற நடவடிக்கையை இந்தியாவிடமும் இருந்து எதிர்பார்ப்பதாக இலங்கை அதிபர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக 13–ந் தேதி இலங்கைக்கு செல்கிறார். அதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாக 86 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இலங்கைக்கு வரும் பிரதமர் மோடியை சந்திக்க இலங்கை வடக்கு மாகாண தமிழ் மீனவர் சங்க பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தகவலை தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக