siruppiddy

29/3/15

மக்களின் உரிமை ந்த இடங்களில் குடியேற்ற கோருவது???

தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்ற வேண்டுமென தமிழ் மக்கள் கோருகிறார்கள். அப்படி கோருவதற்கு அவர்களிற்கு நூறுவீத உரிமையுள்ளது. பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படாத வகையில் சொந்த நிலங்களில் அவர்களை எப்படி மீள்குடியேற்றுவதென்பதற்கு பொறிமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும். இப்படி யாழில் வைத்து பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுரை கூறியுள்ளார்
 பிரதமர் ரணில் விக்கிரசிங்க.
பிரதமரின் யாழ் விஜயத்தின் இறுதிநாளான நேற்று பாதுகாப்பு தரப்பினரை சந்தித்தார். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இப்படி அறிலுரை கூறியுள்ளார். நேற்று பலாலி, காங்கெசன்துறை தளங்களிற்கு சென்று சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
முதலில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர சந்தித்தார். பின்னர் விமானப்படையினரை சந்தித்தார். இறுதியாக கடற்படையினரை சந்தித்தார். அங்கு உரையாற்றிய ரணில்-
“வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இவற்றிற்கு நாம் முதலில் தீர்வுகாண வேண்டும். சமாதானமான சூழலை ஏற்படுத்த எப்படியான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென்பதை தேடிப்பார்க்க வேண்டும். யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றை தீர்ப்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.
வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகள், கல்வியியலாளர்கள், மக்கள், அதிகாரிகள், பொதுமக்கள், மீனவர்கள் என பலதரப்பினரையும் சந்தித்தேன். அவர்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி சொன்னார்கள். அவை பற்றியே இன்று உங்களுடன் பேசுகிறேன்.
எங்களின் நிலங்களில் எங்களை மீண்டும் குடியேற்றுங்கள் என தமிழ்மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு கேட்க அவர்களிற்கு நூறுசதவீத உரிமையுள்ளது. இதனை நாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
தேசியபாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்மக்களை அவர்களின் சொந்தநிலங்களில் கட்டம்கட்டமாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும். மீண்டும் பிரிவனைவாத யுத்தமொன்று ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை நாம் வழங்கக்கூடாது.
நான் வடக்கு மீனவர்களை சந்தித்தபோது அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்கள். தமது கடற்பகுதிக்குள் தென்னிலங்கை மற்றும் இந்திய, சீன மீனவர்கள் ஊடுருவி கடல்வளத்தை அழிப்பதாக குற்றம்சாட்டினார்கள். இதில் அவர்கள் இலங்கை கடற்படையினராகிய உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.

இந்திய மீனவர்கள் அத்துமீறல் பற்றி இந்திய அரசுடன் பேச வேண்டும். எமது கடல்வளத்தை அவர்கள் சுரண்ட அனுமதிக்க முடியாது. அத்தோடு, ரோலர் மீன்பிடிக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது. தேவையானால் அவர்கள் ஆழிகடல் மீன்பிடியில் ஈடுபட முடியும். இதற்கு இந்தியா காலஅவகாசம் கேட்டுள்ளது.
எமது கடல்வளம் பாதுகாக்கப்பட வேண்டும். எமது கடலில் மீன்கள் மட்டுமல்ல எண்ணெய்யும் உள்ளது. எனவே அதனை பாதுகாக்க வேண்டும் என்றார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக