siruppiddy

16/3/15

கோத்தா முகாம் பற்றிய ஆதாரங்களை வழங்கத் தயார்:அதிரடி அறிவிப்பு!

சாட்சியங்களிற்கு உயிர் உத்தரவாதம் கொடுத்தால் திருகோணமலை கோத்தா முகாம் தொடர்பான ஆதாரங்களை வழங்க தயார் என அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணம் வளலாய் பகுதியில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து பேசிய சமயத்தில் ஊடகங்களிடம் இதனை சுரேஷ் தெரிவித்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதியின் ஊழல் தொடர்பாக, மற்ற அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாக இந்த அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தினம் தினம் ஒவ்வொரு ஊழல்கள் பற்றி தகவல்களை வெளியிட்டு, விசாரணைகளை செய்கிறார்கள்.
யுத்தகாலத்தில் இருபதாயிரம் வரையான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களில் எழுநூறு பேர் திருகோணமலை கோத்தா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு எம்மிடம் முழுமையான ஆதாரங்கள் உள்ளன. முல்லைத்தீவில் உறவுகளை படையினரிடம் உயிருடன் கையளித்த நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளனர்.
இப்படியொரு பாரிய மனிதாபிமான பிரச்சனையை, முழு சர்வதேசமும் அக்கறை செலுத்திவரும் பிரச்சனையை- அப்பிடியொரு முகாம் அங்கில்லையென பொறுப்பற்ற விதத்தில் கூறி தட்டிக்கழித்து விட முடியாது. அங்கு அப்படியொரு முகாம் முன்னர் இருந்தது. அங்கு எழுநூறுவரையான தமிழர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கு ஆதாரமுள்ளது. சாட்சிகளிற்கு உயிர்ப்பாதுகாப்பு வழங்கினால் அவற்றை ஒப்படைக்க தயாராக உள்ளோம்.
இந்த மனிதாபிமான பிரச்சனையில் ஜனாதிபதியும், நீதியமைச்சரும் முழு ஈடுபாடு காட்ட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக