siruppiddy

4/3/15

கோரிக்கைகளை நிராகரித்த மனித உரிமை பேரவை தலைவர்


இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கோரி பல அமைப்புகள் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளன.
இருந்த போதிலும் ஐ.நா மனித உரிமை பேரவையின் தலைவர் ஜோகிம் றகர் அந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
மன்னார் மறை மாவட்ட ஆயர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கொழும்பில் இயங்கும் பிரதான அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்கள் இந்த அறிக்கையை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனை தவிர போர்க்குற்ற அறிக்கையை உடனடியாக வெளியிடுமாறு கோரி, மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராத் ஹூசைன் மற்றும் மனித உரிமை பேரவையின் தலைவர் றகர் ஆகியோருக்கு அதிகளவிலான குறுந்தகவல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் அமைப்புகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக