siruppiddy

9/4/13

10 வருடமாக தலையில் துப்பாக்கிச் சன்னத்தோடு இருந்த



லண்டனில் கடந்த 2001ம் ஆண்டு முதல் வசித்துவந்த ராமச்சந்திரன் சிவகுமார் என்னும் போராளி, கடந்த வருடம் டிசம்பர் மாதம் திடீரென மரணமடைந்தார். 41 வயதுடைய சிவகுமார் என்னும் இப் போராளி 13 வருடங்களாக புலிகள் அமைப்பில் இருந்து போராடியுள்ளார். அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் , பின்னர் பிரித்தானியா வந்து தனது மனைவி மற்றும் மகளுடன் ஹம்ஸ்டட் நகரில் வசித்துவந்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் நாள் அவர் குழிக்கச் சென்றவேளை, மயக்கமடைந்து குழியலறையில் வீழ்ந்தார் என்று பொலிசார் நேற்றைய தினம் நடைபெற்ற மரண விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள். மயக்கமடைந்த சிவகுமார் பின்னர், றோயல் பிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் 2 நாட்கள் கழித்து அவர் இறந்துவிட்டார் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
தனது கணவருக்கு தலையில் காயம் இருந்ததை நான் அறிவேன். அவரது அம்மா மற்றும் நண்பர்கள் எனக்கு கூறியிருக்கிறார்கள். ஆனால் அவர் இதுதொடர்பாக என்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லை, ஏன் என்றால் நான் பயந்துவிடுவேன் என்பதற்காகத்தான் என்று நீதிமன்றில் கண்ணீர்மல்க கூறினார் சிவகுமாரின் மனைவி. தனது கணவர் அதிகாலை 3.00 மணிக்கே வேலைக்குச் செல்வார் என்றும், அதனால் அவர் இரவு 12.00 மணிக்கு குழிக்கச் சென்றார், அவ்வேளையே அவர் மயங்கி விழுந்தார் என்று அவர் கூறியுள்ளார். தலையில் துப்பாக்கிச் சன்னம் போன்றதொரு பொருள் காணப்பட்டதாகவும், இந்த கூரிய பொருளே அவர் இறப்புக்கு காரணம் எனவும் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் நீதிமன்றில் சாட்சியமளித்தார். இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தில் , சிவகுமார் காயமடைந்ததனாலேயே அவர் இறப்பு நிகழ்ந்தது என்பதனை நீதிபதி உறுதிப்படுத்தி தீர்ப்புவழங்கியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது.
அதுமட்டுமல்லாது நீதிபதி தனது உரையில், "விடுதலைப் புலிகள் என்னும் போராட்ட அமைப்பில் இருந்த" சிவகுமார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றும் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகங்கள் "விடுதலைப் புலிகளின் போராட்ட வீரர்" என்ற சொற்பதங்களையே பாவித்துள்ளமை தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனது இறப்பிலும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திகழ்ந்திருக்கிறார் சிவகுமார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக