siruppiddy

29/4/13

விடுதலைக்கான மூன்றாவது கட்டப் போராட்டம்:


இப்போது நடப்பது ஈழ விடுதலைக்கான மூன்றாவது கட்ட போராட்டம். ராஜபக்சவுக்கும் அவனது கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத்திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப் போராட்டம். இவ்வாறு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்தார்.

சென்னை தியாகராஜ நகரில், தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்பு சார்பில்  நடைபெற்ற கருத்தரங்கத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில்சுப. வீரபாண்டியன் தொடர்ந்து பேசியதாவது,
இலங்கையில் ஈழத் தமிழர்களுக்காக, ஈழ விடுதலைக்காக  செல்வா தலைமையில் அமைதி வழியில் நடந்தது முதல் கட்ட போராட்டம்.
அதனையடுத்து தேசியத்தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆயுதவழி போராட்டம் இரண்டாம் கட்டமாக நடைபெற்றது.
எப்படி அமைதி வழி போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதோ? அதே மாதிரி ஆயுதவழி போராட்டத்திலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
பின்னடைவு ஏற்பட்டதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் வெட்கப்படக்கூடாது.
ஆனால் வீழ்வது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. நாம் மீண்டும் எழுவோம்.
இப்போது நடப்பது ஈழ விடுதலைக்கான மூன்றாவது கட்டப் போராட்டம்.

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கும் அவனது கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத் திற்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப் போராட்டம்.
இந்த சிக்கலை உலக நாடுகளூக்கு கொண்டு சென்று அதன் மூலமாக வெற்றியைப் பெறுவோம் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக