siruppiddy

12/4/13

புலிகளும் அமெரிக்காவும் ஒன்றுசேரவேண்டும்?:


விக்கி லீக்ஸ் தகவல் ! இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள தீவிரவாத முஸ்லீம்களை அடக்க, புலிகளும் அமெரிக்காவும் ஒன்றுசேரவேண்டும் என்று, அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பியுள்ளது. 2002ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் அனுப்பப்பட்ட பாதுகாப்பான கேபிள் செய்தியையே விக்கி லீக்ஸ் தரவுகள் தற்போது வெளியிட்டுள்ளது. அக் காலகட்டத்தில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதர அதிகாரியான ஆஷ்லி வில்ஸை சந்தித்த நபர் ஒருவர், கிழக்கில் உள்ள சில முஸ்லீம்கள் ஆயுதம் ஏந்த தயாராக இருப்பதாகவும் எனவே அவர்களை அடக்க விடுதலைப் புலிகளோடு நீங்கள் ஒன்றுசேரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளோடு நீங்கள் இணைந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பிட்ட நபர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர் என்றும் கூறப்படுகிறது. இவர் கூறிய கூற்றுகளை அப்படியே , தனது தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளார் ஆஷ்லி வில்ஸ். குறிப்பிட்ட இவ்விடையத்தில் பல உள்ளர்த்தங்கள் உள்ளது. எந்த நிலையிலும் அமெரிக்கா புலிகளுடன் இணைந்துசெயல்பட விரும்பாது என்பது ஒரு புறம் இருக்க, முஸ்லீம்களையும் புலிகளையும் கோத்துவிடும் நடவடிக்கையாகவும் இதனைப் பார்க்கலாம் என்றால் மிகையாகாது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக