siruppiddy

14/4/13

போராட்டம் விஸ்தரிக்க​ப்படுகின்ற​து: பிரித்தானிய ?


பிரித்தானிய தமிழர் பேரவை தளராத நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டி, புலத்தில் முழுமையாக மக்கள் பங்களிக்கும் பங்குபற்றல் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமாக இதனை முன்னெடுக்க வேண்டுமென்ற மூலோபாயத்துடன் செயட்பட்டுவருகின்றது. இதனடிப்படையில் தமிழ் மக்கள் செறிவாயுள்ள பிரதேசங்களை அடையாளங்கண்டு அந்தந்த பிரதேசங்களில் உள்ளூர் தமிழர் பேரவைகளை அவ்விடத்து மக்களே தெரிவு செய்யும் வண்ணம் தனது கட்டமைப்பை ஆழமாக விஸ்தரித்தது
இந்த வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு முன்னர் இவ்வாறான உள்ளூர் தமிழர் பேரவைகளை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் விடுதலை மூச்சை வீச்சாக மக்களிடையே கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்கள் பக்கம் மெதுவாக பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ள சர்வதேச அரங்கத்தில் பிரித்தானிய தமிழர்களின் செயற்பாடுகள் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் இக் கால கட்டத்தில், மக்கள் தங்கள் இடத்தில் உள்ள தமிழர் பேரவைகளில் கலந்து கொண்டு உங்களால் முடிந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முன் வருமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அன்புடன் வேண்டி நிற்கின்றது.
இதனொரு கட்டமாக 07.04.2013ம் திகதி
Harrow ,Ealing,Hayes and Harlingdon,Birmingham,13.04.2013ம் திகதி அன்று Manchester தமிழர் பேரவை . புதுப்பிக்கப்பட்டது.. இதன் அடுத்தடுத்த கட்டங்களாக Eastham 15.04.2013ம் திகதியும், Walthamstow 20.04.2013ம் நடைபெற உள்ளதால் இச் சந்திப்புக்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக