siruppiddy

19/4/13

திட்டமிட்டு அழித்த அமெரிக்கா அதிர்ச்சி ?,,


அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்காக தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி – தமிழ் ஈழத்தைக் கைவிடச் செய்து – அவர்களைக் கொண்டு இலங்கை அரசைத் தமக்கு அடிபணிய வைக்கும் தந்திரத்தை அமெரிக்கா மேற்கொண்டது. அதற்காகத்தான் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்து அவர்களுக்கு சர்வதேச ரீதியான நிதி உதவிகளையும், ஆயுத உதவிகளையும் தடைசெய்தது. இலங்கைக்கு தனது அடிவருடி இஸ்ரேல் அரசு மூலம் ஆயுதங்கள் வழங்க உதவியது. இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழினம் அழிக்கப்படுவதை மௌனமாக அங்கீகரித்தது. எனவே அமெரிக்காவும் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட ஒரு நாடுதான். இலங்கை அரசு அமெரிக்காவின் பேச்சைக் கேட்காமல் இரசியா, சீனா உதவியுடன் விடுதலைப் புலிகளை அழித்தொழித்தது. தற்போது சீனாவின் பக்கம் இலங்கை சாய்வதை தடுத்து நிறுத்தி தன்பக்கம் கொண்டு வரவே அமெரிக்கா மனித உரிமை பற்றிப் பேசுகிறது.
அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா தலையிட்டு சிதைத்ததன் விளைவாகத்தான் அந்தத் தீர்மானம் இந்த அளவுக்கு மாற்றப்பட்டது என்பது ஒரு பகுதிதான் உண்மையாகும். ஆசியா மீதான அமெரிக்காவின் மேலாதிக்க நலன்களும், இலங்கை மீதான இந்தியாவின் துணைமேலாதிக்க நலன்களும்தான் அமெரிக்க-இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையில் திரைமறைவில் பேரங்கள் நடப்பதற்கும் தீர்மானம் நீர்த்துப் போவதற்கும் காரணங்களாக அமைந்தன.
இந்திய அரசு, ஐ.நா தீர்மானம் குறித்து இலங்கை அமெரிக்காவுடன் பேசவேண்டும் என்று ஆரம்பம் முதலே வற்புறுத்தியது. அமெரிக்க அடிவருடி, அரசியல் மாமா சுப்பிரமணிய சாமியை இலங்கைக்கு அனுப்பி – அமெரிக்காவோடு பேசுவதற்கு ஏற்பாடு செய்தது. சுப்பிரமணிய சாமியின் ஏற்பாட்டுடன் இலங்கை அமெரிக்காவுடன் திரைமறைவில் பேரம் பேசியே – இந்தியாவின் ஆலோசனை அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் ஈழத் தமிழருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க – இந்திய கூட்டுச் சதியே அதற்கான காரணமாகும். அதிலும் அமெரிக்காதான் முதன்மை பாத்திரத்தை வகித்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக