siruppiddy

30/4/13

அரசுக்கு சாபம் கொடுத்த வீர ?


தமிழர் தாயகப் பகுதிகளில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்ட நில அபகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக தமிழர்களால் பல எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 அந்த வகையில் வலி. வடக்கு மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட வயதான வீரத் தமிழச்சி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுக் கொந்தளித்தார்.
தனது நிலத்தினையும், வீட்டையும் சிறிலங்கா இராணுவத்தினர் சுவீகரிக்கவிருப்பதினை எதிர்த்து தாய் ஒருவர் சிங்களபடைகளுக்கும், மஹிந்த அரசுக்கும் மண் அள்ளி எறிந்து சாபமிட்டார்.
 "நான் சத்தியமாய் சொல்கிறேன், எங்கள் காணியைப் பிடித்து வைச்சிருக்கிற நீங்கள் எல்லாம் நாசமாய் போவீர்கள். வயிறெரிந்து சொல்கிறேன்'' என்று கூறி மண் அள்ளி வீசித் தூற்றினார் அவர்.
"நான் இது வரை பல வீடுகள் மாறிப் போய்விட்டேன். என் வீட்டை நீங்கள் பிடித்து வைத்திருக்கிறீர்கள். நான் வீடிருந்தும் அகதியாய் திரிகிறேன்'' என்று அழுது புலப்பினார்.
 நேற்றையதினம் மக்கள் ஊர்வலம் செல்லாத வகையில் பொலிஸார் அவர்களைத் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் முன்பாக தடுப்பிட்டு மறித்து அச்சுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக