siruppiddy

6/9/15

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க மாட்டோம்.கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதியின்!

இன அழிப்பின்
உக்கிரம்..
எரிக்கப் பட்டத்து
நூல் நிலையம்..!
உடைக்கப் பட்டது
பள்ளிக்கூடங்கள்..!
அழிக்கப் பட்டது
மருத்துவ மனைகள்.!.
உருக்குலைக்கப்பட்டது
ஆலயங்கள்…!

கொல்லப் பட்டனர்
புத்தி ஜீவிகள்…
சிறைப்பிடிக்கப் பட்டனர்
மாணவர்கள்…
மருத்துவர்கள்
காயப் பட்டனர்..
ஊடகவியலாளர்கள்
காணாமல் போயினர்..

ஆட்சிகள் மாற்றம்
அடிக்கடி நிகழும்
வாக்குகள் வாக்குக்காக
வழங்கப் படும்
புனரத்துவங்கள்
சில நடக்கும்
இராணுவ பாசறைகள்
பலப்படுத்தப் படும்..!

போக்குவரத்து
சிறிதளவு சீராகும்
விடுதலைகள்
கண்துடைப்பாகும்.
நல்லினக்க ஒப்பந்தம்
பேச்சளவில் நீளும்
குடியேற்றங்கள்
அதிகரிக்கும்..

ஆனாலும் எதிலுமே
நிவர்த்தியில்லை.
மீளக்குடியேற்றம்
நத்தை வேகத்தில்
பிரதான வீதியும்
பட்டினங்களும் அங்கு
பளிச்சிடும். நாங்கள்
எதுவுமே கேட்கமாட்டோம்..

உடைந்த பள்ளிக்கூடங்கள்
மேலும் சிதைவுக்குள்
படித்த மாணவர்கள்
வீதியெங்கனும்
கலாச்சார சீரழிவுகள்
கண்டபடி அரங்கேறும்.
அடையாளமிழந்த
ஆலயங்களை மட்டும்
புனரமைப்பு செய்து
கொடியேற்றி தினம்
கும்பாபிஷேகங்களை
நாங்கள் செய்கின்றோம்..
ஆண்டவனும் ஆள்பவனும்
கைவிடானாம்…..!

ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக