siruppiddy

6/9/15

அன்றும் இன்றும் கவிஞர் வன்னியூர் செந்தூரனின்

தமிழ் பேசி உறவாடி 
தலைநிமிர்ந்த நாட்கள் அன்று ..
வேறுமொழி பேசி 
வேசமிடும் வீணான வாழ்வு இன்று

மரணத்தின் வாசலிலும்
மகிழ்வான பொழுதுகள் அன்று
போலிக்குள் புதையும்
வேர் கிழித்த வாழ்வுகள் இன்று

வாழ்ந்தாலும் செத்தாலும்
மானத்தோடு அன்று
கதைத்தாலும் சிரித்தாலும்
பணத்தோடு இன்று

கால்நடைப் பயணம் எனினும்
காவலான தூரம் அன்று
கள்ளிப்பற்றையும் கூட
கருவறுக்கும் இழிவு இன்று

தன்னிறைவு பொருளாதாரம்
தாராளம் அன்று
தாராள தவணை முறையால்
தலைக்குமேல் கடன் இன்று

காவியம் வாழவே பலர்
கருகினார் அன்று
கயவர் பலரோ நடிப்பு
கறுப்பாடுகளாய் இன்று

உயிர்கொடுத்து காக்கும்
உத்தம நட்புக்கள் அன்று
செய்நன்றி மறந்துவிடும்
புல்லுருவிகள் இன்று

வன்னியின் பூமி பல
வரலாறுகளைக் கண்டது
மண்ணின் மைந்தர்களும் பல
வலிகளையும் காண்கிறார்கள் .
ஆக்கம்    கவிஞர்வன்னியூர்செந்தூரன்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக