siruppiddy

13/8/13

பிரபாகரனின் மறுஅவதாரமே விக்கினேஸ்வரன்:


பிர­பா­க­ரனின் மறு அவ­தா­ர­மா­கவே இன்று விக்­கி­னேஸ்­வரன் உரு­வெ­டுத்­துள்ளதாக சிங்கள எழுத்தாளர் சமில லிய­னகே தெரிவித்துள்ளார். பொதுபாலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விக்கினேஸ்வரனின்  செய்­கை­களும் பேச்­சுக்­களும் திருப்தி தரு­வ­தாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லிய­னகே இவரை ஆரம்­பத்­தி­லி­ருந்தே கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்­குகள் ஜனா­தி­ப­தி­யிடம் இது தொடர்­பாக கோரிக்கை விட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குரு­வைக்­கல்லு என்ற தமிழ்ப்­பெ­யரே இன்று குரு­ணாகல் என்று திரி­ப­டைந்­துள்­ளதாகக் குறிப்பிட்ட அவர் குரு­ணாகல் அத்­து­கல்­புர எனப் பெயர் மாற்றம் செய்­யப்­பட வேண்டும் என்றார்.
2012 கணக்­கெ­டுப்­பின்­படி இலங்­கையில் எட்டு மாவட்­டங்­களில் பெளத்­தர்­களின் எண்­ணிக்கை வீழ்ச்சி அடைந்­துள்­ளதாகவும் வடமேல் மாகா­ணத்தில் இது அதி­க­மாக உள்­ளது என்றும் தெரிவித்தார்.
சிங்­க­ள­வர்­களை அழிக்க வேண்­டு­மானால் சிங்­களத் தன்­மையை இல்­லாமற் செய்ய வேண்டும் என்று இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பெளத்த பாரம்­ப­ரி­யத்­தையும் பழ­மை­யையும் ஏனை­ய­வ­ருக்கு விற்று வரு­கின்­றனர் எனவும் குற்றம் சுமத்தினார்.
இந்­தியா அல்ல யுத்­தத்தை வெற்றி கொள்ள உத­விய நாடு என்று தெரிவித்த லியனகே எமது இரா­ணுவ வீரர்­களின் முயற்­சியே வெற்றி பெற்றுத் தந்­தது எனவும் குறிப்பிட்டார். யுத்தப் பிர­தே­சத்தின் 39 அரச சார்­பற்ற அலு­வ­ல­கங்­களில் நவீன பங்­கர்கள் காணப்­பட்­டன எனவும் இவர்­களே இன்று ஜெனீவா சென்று தம்மைத் தூற்­று­கின்­றனர் எனவும் தெரிவித்த அவர் பாது­காப்புச் செய­லா­ளரைக் கொலை செய்ய இவர்­களே வடக்­கி­லி­ருந்து குண்டை தங்கள் வாக­னத்தில் கொண்டு வந்­தனர் என்றும் குறிப்பிட்டார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக