siruppiddy

1/8/13

விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக

 
ஆறு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட மா அதிபர் திணைக்களம் இந்தக் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. கடற்படைக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமைக்காக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கப்பலைத் தாக்கி, கடற்படை உத்தியோகத்தர்களை படுகொலை செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி தோல்வியடைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு கடற்படையினரின் சயுரா என்ற கப்பல் மீது இந்த ஆறு புலி உறுப்பினரும் தாக்குதல் நடாத்த முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் கொழும்பு உயர் நீதிமன்றிடம் சட்ட மா அதிபர் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. நீர்கொழும்பிற்கு அருகாமையில் குறித்த கப்பல் நங்கூரமிட்டிருந்த தருணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக