siruppiddy

16/8/13

த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது நெடுந்தீவில் தாக்குதல்


நெடுந்தீவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனரகரத்தினத்திற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்கள் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்யச் சென்றபொழுது விசாரணைகளை ஏற்கமுடியாதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரியிடம் வினாவிய பொழுது இச் சம்பவங்கள் தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் இன்னமும் பதிவு செய்யப்படவில்லையென அவர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்திற்கு ஆதாரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் கடந்த நான்கு நாட்களாக வட மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மீது மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதலில் ரணசிங்க ஆரியக்கோன் (வயது 40) என்ற நபர் கடுமையான காயங்களுக்கிலக்காகிய நிலையில் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சைமன் ஜேசுதாஸன், ஜேசுதாஸன் அன்டனிட்டா ஆகியோர் மீதும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக