siruppiddy

16/5/13

சிங்கள புலனாய்வுத்துறைக்கு துணைபுரிந்த?


  
தமிழ்மக்களுக்கு சேவை செய்வது என்ற போர்வையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்காக சிறீலங்கா இனஅழிப்பு அரசுக்கு பேருதவி புரிந்துகொண்டிருக்கும் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி, சிறீலங்காவின் புலனாய்வுத் துறையுடன் 2007 ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளர் என்ற தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளது.
இதேவேளை, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த பிற்பாடு, கோத்தபாய ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் கனடாவை தளமாகக் கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய நேர்காணலில் தான் சிறீலங்கா தரப்புகளுடன் 2005 ம் ஆண்டிலேயே தொடர்புகளை பேணியதாக குறிப்பிட்டிருந்தார்.
  சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன், தமிழ் மக்கள் சொல்லொண துன்பத்தை அனுபவித்து ஆயிரக்கணக்கில் பலியாகிக் கொண்டிருந்த தருணத்தில், தான் மக்களை காப்பாற்றுவதற்கான ஆயதங்களை சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுக்திக் கொண்டிருப்பதாக கூறி கடைசி நேரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்து கழுத்தறுத்தவர் கே.பி. அதேவேளை, புலிகள் மக்களை காப்பாற்றுவதற்கான மேற்கொண்ட ஏனைய முயற்சிகளையும், தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாதித்துவிடும் என காரணம் காட்டி முடக்கினார்.
   இறுதியில் மக்களை காப்பாற்றுவதற்கு கப்பலும் வரவில்லை எந்த நாடும் வரவில்லை. சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள்தான படுகொலை செய்யப்பட்டார்கள். ஆயினும், மே 19ற்குப் பின்னர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நேரடியாகவும் இறுக்கமாகவும் இணைந்து செயற்படத் தொடங்கிய கே.பி, தமிழ் மக்களின் அழிவுக்கு புலிகள்தான் காரணம் பூச்சாண்டி காட்ட புறப்பட்டுள்ளார்.
   இதேவேளை, சவால் மிக்க சக்தியாக மாறிவரும் புலம்பெயர் தமிழ்மக்களை பலவீனப்படுத்துவதற்காக சில அமைப்புகளை புலம்பெயர் தளத்தில் உருவாக்கி நெறிப்படுத்துவதோடு, சில தனிநபர்களையும் ஊடுவல் நடவடிக்கைகளுக்காக களம் இறக்கியுள்ளர் என்ற தகவல்களும் கசியத்தொடங்கியுள்ளது.
   ஆகவே, எமது மக்களை பேரழிவுக்குள் தள்ளிய கே.பியையும் அவர் போன்ற துரோகிகளின் செயற்பாடுகளையும் இனம் கண்டு முறியடிப்பது தமிழர்களின் போராட்டத்திற்கு அவசியமாகும். ஆதலால், முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் நான்காம் ஆண்டை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கும் இத்தகைய நகர்வுகளை மேற்கொள்வதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும் என தாயகத்திலுள்ள தமிழ்தேசிய சக்திகள் விடுக்கும் வேண்டுகோளை புலம்பெயர் தமிழர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக