siruppiddy

25/5/13

மீண்டும் விஸ்வரூபம் கொள்ளப் போகிறார் தலைவர்

இந்திய அரசியலில் முதுகெழும்பு இல்லாதவர் என வர்ணிக்கப்படும் மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் வி.நாராயணசாமி  வெளியிட்ட கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சரான வி.நாராயணசாமி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 அமைச்சர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையானது தமிழ்பேசும் இந்தியர்களுக்கும் தமிழர் அல்லாதோருக்கும் இடையில் பகைமையைத் தோற்றுவித்தது என, நியாயதுரந்திரர் சி.ரமேஷ் என்பவர் தெற்கு வலய பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார்.
 இராஜாங்க அமைச்சர் நாராயணசாமி மே மாதம் 20 ஆம் திகதி விடுத்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் ஒரு கோழை எனவும் அவர் பெண்களையும் சிறுவர்களையும் மனித கேடயமாகப் பயன்படுத்தினார் என்றும் கூறியுள்ளார்.
 அமைச்சரின் கூற்றானது பொறுப்பில்லாத ஒன்றாகும் எனவும் இறந்துபோன ஒரு வருக்கு எதிராகக் குற்றம் சுமத்துவதாகும் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமிக்கு எதிராக இந்திய தண்டனைக்கோவை பிரிவில் 153(ஏ) யின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார்.
 வி.நாராயணசாமி நீண்டகாலமாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக