siruppiddy

7/5/13

கடத்திச் சென்று நான்கு நாட்கள் மறைத்து வைத்திருந்த சிவில்,.,



28 வயது யுவதியை கடத்திச் சென்று நான்கு நாட்கள் காட்டிலுள்ள குடிசையொன்றில் மறைத்து வைத்திருந்த சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரையும் அவருக்கு உதவிய நபரொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 யுவதியை கடத்திச் செல்ல உதவிய மற்றுமொரு சிவில் பாதுகாப்பு படை வீரரொருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடத்தப்பட்ட யுவதி நொச்சியாகம, குடாவௌ பகுதியைச் சேர்ந்தவரெனவும் குடும்ப சுகாதார தாதியாக பயிற்சியை முடித்துக் கொண்டு நியமனத்தை எதிர்பார்த்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான சிவில் பாதுகாப்பு படை வீரர் நொச்சியாகம துனுமடலாவ சோதனைச் சாவடியில் கடமையாற்றுபவராவார்.
யுவதி சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் இவரது நடத்தை பிடிக்காததால் காதல் தொடர்பை நிறுத்த முடிவு செய்திருந்ததாகவும் கடந்த 28ம் திகதி இரவு யுவதியின் வீட்டுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த சந்தேகநபர் யுவதியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியுலுள்ள குடிசையொன்றில் மறைத்து வைத்துள்ளார்.
யுவதியின் பெற்றோர் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் மூன்று நாட்களாக தேடியும் யுவதியை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கடத்தப்பட்ட யுவதி கடந்த 3ம் திகதி தம்மை சிவில் பாதுகாப்பு படை வீரர் பலாத்காரமாக ரம்பேவெவ திருமண பதிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திருமணப் பதிவு மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருமண பதிவு அலுவலகத்திற்கு அருகில் காத்து நின்ற பொலிஸார் சந்தேக நபரையும் அவருக்கு உதவிய நபரையும் கைது செய்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக