siruppiddy

24/5/13

மீள்குடியேற்றம் முற்றுப்பெறவில்லை,


ஐ.நா.வின் தலையீடு அவசியம்:யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், இடம் பெயர்ந்த மக்கள் இன்னமும் பூரணமாக மீளக்குடியேற்றப்படவில்லை. இராணுவத்தினர் மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பினை சுவீகரித்துள்ளமையினால் மீள்குடியேற்றம் என்பது முற்றுப்பெறவில்லை. இந்த விடயம் குறித்து ஐ.நா. கவனம் செலுத்தவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா. வின். மனிதாபிமானப்பணிக்களுக்கான ஒருங்கிணைந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரி ஜக்னஸ் தலைமையிலான குழுவினர் கிளிநொச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.க்களை சந்தித்து பேசியிருந்தனர். இந்த சந்திப்பின் போதே கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
கடந்த ஒருவார காலமாக வடபகுதியில் தங்கியுள்ள ஜக்னஸ் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களையும் இராணுவ கட்டளைத் தளபதிகளையும் இடம் பெயர்ந்து மீளக்குடியேறியுள்ள மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளனர். இதன் ஒரு கட்டமாகவே கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், மற்றும் வன்னி மாவட்ட எம்.பி.க்களை இக்குழுவினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக