siruppiddy

11/6/13

சிறிலங்காவின் துரோகம் -

 மந்திராலோசனை நடத்த தயாராகிறது இந்தியா!,தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கவென இந்திய அரசாங்கத்தினால் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட 13வது அரசியல் திருத்தச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதுஇந்நிலையில் அவசர பேச்சுக்களை நடத்துவதற்காக புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இதையடுத்து அடுத்த வாரத் தொடக்கத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் புதுடெல்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இவர்களை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளதாக அறியப்படுகிறது.

 இந்தச் சந்திப்புகளின் போது, 13வது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் சிறிலங்கா அரசின் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 அதேவேளை, சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மீறிவருவதால், புதுடெல்லி சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பலாம் என்றும் கருதப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக