siruppiddy

3/6/13

புலம்பெயர் தமிழர்களை குறி வைக்கும்

புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்களை இலங்கு வைத்து சிறிலங்கா புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.,இதற்கமைவாக புலம்பெயர் நாடுகளில் வாழும் விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக சிறிலங்கா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பிரதீப மகாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

 இதன்பொருட்டு, சர்வதேச நாடுகளில் வாழும் சிறிலங்காவுக்கு சார்பான புலம்பெயர்ந்தவர்களை பயன்படுத்திக் கொள்ள தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 குறிப்பாக சிறிலங்காவின் மனிதவுரிமைகள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களிடையே சென்றடையும் முறையற்ற அபிப்பிராயங்களை சரிப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

 புலம்பெயர் நாடுகளில் வாழும் விடுதலைப்புலி ஆதரவுகளை இலக்கு வைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று தெரிவித்த ஆணையாளர், அவர்களை சென்று வலியுறுத்தக் கூடிய சில புலம்பெயர்ந்த அமைப்பினர் தமக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாக குறிப்பிட்டார்.

 ஆனால் உண்மையில் இந்த திட்டமானது இந்திய-சிறிலங்கா கூட்டுச் சதித்திட்டத்தின் கீழ் பொது நலவாய நாடுகளின் செயலர் கமலேஸ் சர்மாவினால் முன்மொழியப்பட்ட திட்டமாகும்.

 அதாவது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா மீதான சர்வதேச அழுத்தத்தினை குறைக்க புலம்பெயர் மக்களை பயன்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

 இதனை எப்படி புலம்பெயர் மக்கள் எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்பதே கேள்விக்குறி. இந்த திட்டத்தினை புலம்பெயர் மக்கள் முற்றாக புறக்கணிப்பதுடன் எச்சரிக்கையாகவும் செயற்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக