siruppiddy

20/6/13

சிறீலங்கா போட்டுள்ள திட்டம்: சிக்குவார்களா


        புலம்பெயர் தமிழர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கினாலும், தமிழீழம் என்ற அவர்களுடைய சித்தாந்தத்தை மிக உறுதியாக பற்றியபடி புலம் பெயர் தளத்தில் செயற்படும் தமிழ்த் தேசிய சக்திகள் விளங்குவதாக தெரிவித்துள்ள சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இது சிறீலங்காவுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடிய செயல் எனத் தெரிவித்துள்ளார்.
 கடந்த வாரம் ஜேர்மனிக்கும் நேற்று அவுஸ்ரேலியாவுக்கும் பயணம் செய்த ஜி.எல்.பீரிஸ் குறித்த நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களை சந்தித்த போது, புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். குறித்த அமைப்புகள் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை பரப்புவதோடு, மீண்டும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்த ஜி.எல்.பீரிஸ், இது சிறீலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
 ஜி.எல்.பீரிஸின் இந்தக் கருத்தானது, சிறீலங்கா அரசாங்கத்துக்கு புலம்பெயர் தமிழர்களால் இனஅழிப்பு மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக உருவாகியுள்ள நெருக்கடிகளை தவிர்ப்பதற்காகவே முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக