siruppiddy

6/6/13

அரசியல் அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்கும்??

தமிழர்களுக்கு அதிகாரமற்ற அரசியல் அதிகாரத்தை வழங்குவது பற்றி சிறிலங்கா அரசாங்கம் கவலைப்படவில்லையாம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்தமிழீழத்தில், சிறிலங்கா நடத்தவுள்ள தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து வெற்றியீட்டச் செய்தாலும் அது குறித்து அரசாங்கம் வருந்தப் போவதில்லையாம் என தெரிவித்துள்ளார்.
  இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
    "மாகாணசபைகளின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வெற்றி குறித்து கவலையடைப் போவதில்லை.
   மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்யும் யோசனைக்கு, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளும் எதிர்ப்பை வெளியிடவில்லை.
   மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அண்மையில் அலரி மாளிகையில் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று நடைபெற்றதாகவும் இதன் போது எவரும் காணி, காவல்துறை அதிகாரங்கள் நீக்கப்படுவதனை எதிர்க்கவில்லை.
   எவ்வாறெனினும், 13ம் திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக ரத்து செய்ய தமது கட்சி தொடர்ந்தும் போராடும்.
   விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் சர்வதேச சக்திகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் கிடையாது" என விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக