siruppiddy

18/6/13

தேசிய தலைவர் பிரபாகரனின் கனவை நனவாக்க சிறிலங்கா முயற்சியாம்!



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவான ஈழத்தினை சிறிலங்கா அரசாங்கம் போர் புரியாமலேயே நனவாக்க முனைகிறதென ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா தெரிவித்துள்ளார்.
    பொது எதிரணிக் கட்சிகளின் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
   "அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்க வைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே உண்டு.
   வடக்குத் தேர்தல் நடத்துவது குறித்து நாட்டில் தற்போது பல கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து நாட்டின் பல தலைவர்களும் பல கருத்துகளை முன் வைத்துள்ளனர். 
   இந்நிலையில், அரசிலுள்ள பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வடக்குத் தேர்தலுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் தமது முடிவைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாட்டில் மீண்டும் இனவாதம் தோன்றி பேராபத்து ஏற்படும்.
   அத்துடன், பிரபாகரன் போர் மூலம்  நாட்டை பிளவு படுத்தலாம் என்று கண்ட கனவை இன்று போரின்றி தாமாகவே வழங்க அரசு நடவடிக்கை எடுக்கிறது.
   13ஆவது திருத்தச் சட்டம்,  வடக்குத் தேர்தல் ஆகியவை குறித்து ஐ.நா. சபைக்கும், சர்வதேசத்துக்கும் மற்றும் இந்தியத் தலைவர்களுக்கும் அரசு வாக்குறுதி அளித்துள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பிலிருந்து அரசு தவறக்கூடாது." என்று ஜோசப் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக