siruppiddy

14/6/13

ஜெர்மனியிடம், இலங்கை கோரிக்கை



புலிச் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு ஜெர்மனியிடம், இலங்கை கோரிக்கை
 தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்குமாறு ஜெர்மனியிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் ஜெர்மனியில் இயங்கி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
 தற்போது ஜெர்மனிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
 உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்று முனவைக்கப்படும் என  அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, சமூக நிறுவனங்கள் என்ற போர்வையில் சில விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகள் இயங்கி வருவதாக ஜெர்மனிய அமைச்சர் குய்டோ தெரிவித்துள்ளதாக அரசாங்கதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 புலிகளுக்கு ஆதரவான வகையில் பாடசாலைகளும், பிரச்சாரப் பணிகளும் மேற்கொண்டு வருவதாக இலங்கையிலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக அரசாங்கதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக