siruppiddy

11/6/13

கொலையாளியாக மாறும் காவல்துறை!?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம் என்பவரை கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இச்சம்பவம் தொடர்பில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரும் அடங்களாக நான்கு பொலிஸார் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

 இந்நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு பிரிவினரால் அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். 

 கடந்த மாதம் 22ம் திகதி கடத்தப்பட்ட கோட்டீஸ்வர வர்த்தகரான சியாம் என்பவர் காணாமல் போய் தேடப்பட்டு வந்த நிலையில் தொம்பே பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டிருந்தார். 

 கடத்தப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இவரது சடலம் ஒருவாரத்திற்கு பின்னர் கடந்த 31ம்திகதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

 இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசார¨ணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்ததுடன் இதனுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தி வந்தனர்.

 கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கொலைச் சம்பவத்துடன் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு உள்ளமை தெரியவந்தது. 

 30 இலட்சம் ரூபா ஒப்பந்த அடிப்படையிலேயே இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

 பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக