siruppiddy

3/6/13

தமிழீழத்தில் அமெரிக்காவுக்கு என்ன வேலை?

தமிழீழத்தில் தேர்தலை ஒன்றை நடத்த வேண்டிய தேவை சிறிலங்காவை விடவும் மேற்குலக நாடுகளுக்கு அவசியமாக உள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் களுத்துறை நகர மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  இங்கு மேலும் கருத்து வெளியிட்ட வீரவன்ச,
  வடக்கில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வியையே இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இந்த தேர்தலை நடத்த வேண்டிய தேவை வடக்கில் உள்ள மக்களை  விட அமெரிக்காவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 பிராந்தியத்தின் அதிகாரம் பொருந்திய நாடு என்ற வகையில் இந்தியாவுக்கும் அந்த தேவை உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 தமிழீழத்தில் தேர்தலை நடந்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதனை தடுக்கும் முயற்சியில் கடும்போக்கு சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளான வீரவன்ச உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவி்த்து வருகின்றனர்.

 அவ்வாறானதொரு தேர்தல் நடக்கும் பட்சத்தில் தனி ஈழம் அமைந்து விடும் என்பதே இவர்களின் அச்சம் என குறிப்பிடப்படுகிறது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக