siruppiddy

8/7/13

19987இல் இந்தியா கண்ட கனவு இன்று நனவாகிவிட்டது.

  -
 ஜெனீவா தீர்மானம் ஏற்கப்படாத நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா சொல்லப்போவது என்ன?
1983 ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் அண்டு முள்ளிவாய்க்கால் அவலம் வரை எத்தனை கண்டனங்கள் அழுத்தங்கள். அத்தனையும் சலித்துப்போய்விட்டன.
பொதுநலவாய நாடுகளின் மாநாடு இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறும்போது இனப்பிரச்சினைத் தீவுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் இந்தியாவும் கூறுகின்றது. ஏன் பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்காத அமெரிக்காவும் எதிர்பார்க்கின்றது. ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை இந்த கண்டனங்கள் அழுத்தங்கள் போன்றவற்றை 1983ஆம் ஆண்டில் இருந்து காண்கின்றனர். 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் நடைபெற்றபோது எத்தனை கண்டனங்கள் எழுந்தன. ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் கூட இலங்கை நிலைமை விவாதிக்கப்படும் நிiஉ ஏற்பட்டது. அப்போது அதனை இந்திய அரசு தடுத்து இலங்கைக்கு சார்பாக செயற்பட்டது. 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்ற முற்பட்டவேளை அப்போதிருந்த ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக எச்சரிக்கை செய்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த இலங்கையின் அப்போதைய வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் ஐநா வெயலாளருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என கூறியிருந்தார்.
1995,2009ஆம் ஆண்டுகளில் நிகழந்தவை
மிகவும் பயங்கரமான மனித அவலங்கள் இன அழிப்புகள் ஏற்பட்ட 1995, 2009ஆம் ஆண்டுகளில் இலங்கையை கட்டுப்படுத்த முடியாத சர்வதேச சமூகம் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் எவ்வாறான அழுத்தங்களை கொடுக்க முடியும்? 1983ஆம் ஆண்டு கொழும்பில் ஏற்பட்ட இனக்கலவரம் சர்வதேச அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தர்லும் அது ஆசிய பிரந்தியத்தில் இனப்பிரச்சினையை முதன் முதலில் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். 1985ஆம் ஆண்டு முதன் முதலாக ஆசியாவில் ஏழு நாடுகளை உள்ளடக்கிய சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போது இலங்கையில் எழுந்துள்ள இனப்பிரச்சினைக்க தீர்வு காண்பதற்குரிய அழுத்தங்களை கொடுப்போம் என இந்திய அப்போது கூறியிருந்தது. ஏனெனில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பிரந்தியத்தில் அமைதி தேவை என இந்தியா கூறியிருந்தது. முதலாவது சார்மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அமார் ஜே.ஆர்.ஜயவர்த்தன உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவின் ஒத்துழைப்பு பெறப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
ஆனால் நடந்தது. என்ன? முதன் முதலாக பூட்டான் நகரில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சு முறிவடைந்து போர் ஆரம்பித்தது. அப்போது விடுதலைப்புலிகள் மாத்திரம் போரில் ஈடுபடவில்லை. அகவே இந்த வரலாறுகள் சர்வதேஅரங்கில் மறக்கப்பட்டிருக்கலாம அல்லது மறைக்கப்படலாம். ஆனால் தமிழர்களின் மனங்களில் இருந்து அவற்றை நீக்கிவிட முடியாது. இந்த நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் அழுத்தம் கொடுப்போம் என இந்திய உறுதியளித்ததை தமிழத்தேசிய கூட்டமைப்பு எந்தளவுக்கு நம்புகின்றது? 2009 இல் போர் முடிவடைந்தவுடன் அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்ட கடும் அழுத்தம் ஜெனவீவா மனித உரிமைச் சபை வரையும் வந்து நின்றது. ஆனால் இதுவரையும் அதற்கு கொடுக்கப்பட்ட மதிப்பு அல்லது விலை என்ன? புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் வார்த்தையில் கூறினாலும் அவ்வாறே அது நடந்து முடிந்துவிட்டது. ஆனால் அதன் பின்னரான நான்கு ஆண்டுகளிலும் இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கின்ற அநீதிகள் பயங்கரமானவை என்று தெரிந்தும் அதனை எந்த பயங்கரவாத பட்டியலில் சர்வதேசம் அடையாளம் இட்டிருக்கின்றது?
அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறியது?
அரசு, அது ஜனநாயக அரசு, ஐக்கியநாடுகள் சபையில் அது அங்கம் வகிக்கின்றது என்ற பட்டியலில் வைத்துக்கொண்டு அநீதிகளை பார்த்துக் கொண்டிருக்கினறர் என்பது தமிழர்களின் ஆதங்கம். இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பண் தெரிவித்திருக்கின்றார். எந்த அடிப்படையில் அவர் இந்த கருத்தை கூறியிருக்கின்றார் என்பதுதான் இங்கு கேள்வி. முன்னாள் பிரதமர் அமரர் இந்திரா காலத்தில் இருந்து இந்தியா இலங்கை அரசாங்கத்துடன் முடியுமானவரை நல்லுறவையே பேணி வந்திருக்கின்றது என்பதுதான் இங்கு வரலாறு தற்போதைய மன்மோகன் சிங் அரசாங்கத்தில் அமெரிக்க சார்பு தன்மை கூடுதலாக காணப்படுகின்றது. இந்திரா காந்தியின் காலத்தில் அணிசேராக் கொள்கை கூடுதலாக காணப்பட்டது. தமிழர்களின் பிரச்சினையில் இந்திராகாந்தி காட்டிய அக்கறை என்பது ஆசியப்பிராந்தியத்தில் வேறு நாடுகளின் தலையீடுகள் வேறு எந்த பிரச்சினைகளையும் காரணம் காட்டி வந்து விடக்கூடாது என்பதை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்திருந்தது. இந்தியாவில் வெளியாகும் ஸ்ரேட்மன் என்ற ஆங்கிலப்பத்திரிகை 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் எழுதிய ஆசிரியர் தலையங்கம் ஒன்றில் தமிழர் பிரச்சினையில் இந்தியப்பிராந்தியத்தை மையமாக கொண்டது என குறிப்பிடடிருந்தது. தமிழர்களின் போராட்டத்திற்கு இந்தியா ஆதரவு வழங்குவதையும் அந்த பத்திரிகை கண்டித்திருந்தது. இந்திய அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான அதிகாரத்தை கொண்ட அளவிலான அதிகார முறைமைதான் ஈழத்திலும் ஏற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை அப்போதைய இந்திய மத்திய அரசு கொண்டிருந்தது.
இதற்கு ஆதரவான போக்குகளை விடுதலைப்புலிகள் தவிர்ந்த வடக்குகிழக்கில் அப்போதிருந்த விடுதலை இயக்கங்கள் வெளிக்காட்டியிருந்தன. சமஷ;டி முறை குறித்து இந்திராகாந்தி காலப்பகுதியில் இந்தியாவில் பேசப்பட்டது. தமிழக பத்திரிகைகளும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. குறிப்பாக ஹிந்து பத்திரிகை முக்கியத்துவம் கொடுத்திருந்நது. ஆனால் சமஷ;டி முறைமைக்குள் தீர்வு காணமுடியாது தமிழீழமே ஒரேதீர்வு என்ற கொள்கையில் விடுதலைப்புலிகள் மாத்திரமே பிடியாக நின்றனர். இதன் காரணமாகவே ஏனைய விடுதலை இயக்கங்களுக்கும் புலிகளுக்குமிடையே கசப்புணர்வுகள் ஏற்பட்டிருந்தன. உண்மையில் இந்திய சமஷ;டி முறை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது என்ற பிரசாரங்கள் அக்காலப்பகுதியில் தீவிரமான முறையில் தமிழ் மக்கள் மத்தியிலும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச அரங்கிலும் முன்னெடுக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். அந்த பொறுப்பிலிருந்து அப்போதைய தமிழ்த் தலைவர்கள் தவறிவிட்டார்கள் என கூறலாம்.
தமிழத் தலைவர்கள் நம்பினர்.
அப்போதிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி இந்தியாவை முற்றுமுழுதாக நம்பியிருந்தது. இந்தியாவின் ஆசீர்வாதத்துடனேயே பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென நம்பியிருந்தனர். இந்திய அரசியல் யாப்பிலுள்ள அதிகாரங்கள் முழுமையான சமஷ;டி முறைமைக்கு ஒத்ததாக இல்லை. பாதி சமஷ;டி தான் இந்திய சமஷ;டி. அங்கு மாநிலங்களுக்கான அதிகாரங்களை விட மத்திய அரசிற்கே அதிகாரங்கள் கூடுதலாக காணப்படுகின்றன. ஒருவகையிலான ஒற்றையாட்சி தன்மை கொண்டிருந்தது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற வெளிநாட்டு நிதி சேர்ப்பு, அல்லது வெளிநாட்டு நிதியுதவிகளை மாநில அரசு நேரடியாக பெறுதல். மற்றும் பாதுகாப்பு, காணி அதிகாரம் போன்ற நிதி,நீதி நிர்வாகம் போன்ற இறைமையுள்ள அதிகார கட்டமைப்புகள் இந்திய சமஷ;டி முறையில் இல்லை. மத்திய அரசு தேவையான நேரப்படி மாநில அரசுகளை கலைக்க முடியும். ஆகவே இவ்வாறான அதிகாரங்களைக் கொண்ட பாதி சமஷ;டி முறை ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று தெரிந்தும் அல்லது தெரியப்படுத்தப்பட்டும் தங்களது பாதி சமஷ;டி முறையை ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக இந்தியா திணிக்க முற்பட்டது.
இந்திரா காந்தியும் இவ்வாறன தீர்வு ஒன்றிற்கே தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஒத்திசைவான பேச்சுக்களை அப்போது நடத்திக் கொண்டிருந்தார். தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமரர் அமிர்தலிங்கம், அமரர் சிவசிதம்பரம் போன்ற தலைவர்கள் மிதவாத கொள்கையுடன் செயற்பட்டதன் காரணத்தினால் அவர்களுடன் அவ்வாறான பேச்சுக்களை இந்தியா வைத்துக் கொண்டது என்பது வெளிப்படை. அத்துடன் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அல்லது அவர்களுடைய தனிநாட்டுக் கோரிக்கையை குலைப்பதற்கு அவ்வாறான அணுகு முறை ஒன்றை இந்தியா கொண்டிருந்தது என்பதும் கண்கூடு. அதனை விடவேறு காரணங்கள் எதுவும் இந்தியாவுக்கு இருந்திருக்கவில்லை.
13க்கு ஏற்பட்டுள்ள அவலம்
எவ்வாறாயினும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் இன்று உயிர்போகிற கட்டத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றது. இதனைக்கூட இந்தியா உள்விவகாரம் என்று கூறிவிட்டு பார்த்தக்கொண்டிருக்கின்ற நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கொடுக்கப்போகும் அழுத்தம் எப்படியான மாற்றத்தைக் கொண்டுவரும்? ஆகவே அதுவும் வெறும் வெற்றுப்பேச்சுதான். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் சர்வதேச மயப்பட்ட இந்த பிரச்சினை அவர்கள் அழிக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு விவகாரமாக மாறிவிட்டது. இந்த நிலை ஏற்பட்ட வேண்டும் என இந்திய 1987; இல் தீர்மானித்திருந்தது. இன்று அவர்களின் கனவுதான் நனவாகியிருக்கின்றது. அதனால்தான் இன்று வரை இலங்கை அரசுடன் அவர்கள் கைகோக்கின்றனர். இந்தியாவில் நாளை பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியமைத்தாலும் மேற்படி வரலாறுகளின் அடிப்படையில் தான் தமிழர் பிரச்சினை கையாளப்படும் என்பது பட்டறி.
செய்ய வேண்டியது என்ன?
கட்சி அரசியலை கைவிட்டு முதலில் தமிழத்தேசிய கூட்டமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு தேசிய இயக்கம்போன்று கூட்டமைப்பு செயற்பட வேண்டும். ஆசியப்பிராந்தியத்தில் ஆயுதப்போராட்டங்கள் சாத்தியப்படக்கூடியது அல்ல என்ற செய்தி புலிகள் அழிக்கப்பட்டதன் மூலம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக வழியிலான அஹிம்சைப் போராட்டாங்களின் மூலம் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் கூட மீறப்படுகின்றது என்ற செய்தியை வெளியுலகத்துக்கு காண்பிக்கலாம். அதற்கு 19920களில் தேசிய இயக்கம் பிளவுபட்டதில் இருந்து 2009 முல்லிவாய்க்கால் வரையுமான வரலாறுகள் உரிய முறையில் மீள்பார்வை செய்யப்பட வேண்டும். முடியுமானால்; பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிலும் ஜெனீவா கூட்டத்திலும் அந்த வரலாறுகளை சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள் அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடலாம். இவை தனியே தமிழத்தேசிய கூட்டமைப்புக்கு மாத்திரம் இருக்க்கூடிய பொறுப்பகள் அல்ல பொதுநிலையினருக்கும் உண்டு?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக