siruppiddy

27/7/13

கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் -



பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் - பெபரல்

பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார்.

சுதந்திரமானதும், சுயாதீனமானதுமான தேர்தல்களை உறுதிப்படுத்த கூடுதலான தேர்தல் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு முறைமையை எமது நாட்டுடன் ஒப்பீடு செய்ய முடியாது எனவும், பாரிய பொருட் செலவில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று மாகாணசபைகளிலும் நடைபெறவுள்ள தேர்தல்களுக்காக 4500 பேரை கடமையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹெட்டியாரச்சி சுட்டிக்காட்டியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக