siruppiddy

6/7/13

தமிழீழத்தை பெறுவதற்கான வாக்கெடுப்பை நடத்த


இலங்கையை இரண்டாக பிரித்து, தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழத்தை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் அடிப்படையில், இலங்கையில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த தலையீடுகளை மேற்கொள்ளுமாறு, புலம்பெயர் புலிகள் நோர்வே மற்றும் அந்த நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திவயின தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில், சர்வதேச ஈழ பேரவை, பிரித்தானியா தமிழர் பேரவை, நோர்வேயின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, தொழிலாளர் கட்சி, இடதுசாரி கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த தலையீடுகளை மேற்கொள்ளுமாறும் புலம்பெயர் புலிகள், நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய ஒருவரும் கலந்து கொண்டதாக தெரியவருகிறது.

சர்வதேச தளத்தில் இலங்கை தொடர்பாக கேள்விகளை எழுப்ப போவதாக நோர்வே இந்த பேச்சுவார்த்தையின் போது உறுதியளித்துள்ளது எனவும் திவயின கூறியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக