siruppiddy

8/7/13

தேர்தல்களை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்


வடக்கு தேர்தல்களை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பாளாகளை ஈடுபடுத்த வேண்டுமென கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரியுள்ளது.
வட மாகாணசபைத் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கள நிலைமைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுக்க வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இறுதித் தினத்தில் மட்டும் கண்காணித்து தேர்தல் சுயாதீனமாக நடைபெற்றது என அறிவிப்பது பொருத்தமாகாது எனவும், அது 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அறிக்கைக்கு நிகராக அமைந்து விடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக