siruppiddy

16/7/13

தனித் தமிழீழம் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் ???


 உலகத் தமிழர்களிடையே சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறிலங்கா தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.

சிறிலங்காவில் இன்னும் தமிழர்கள் மீதான கொடுமைகள் துன்புறுத்தல்கள் தொடர்ந்து நடைபெற்றே வருகின்றன. அங்கு சிங்களவர்களுக்கு இணையான சம உரிமை அந்தஸ்து, வழங்குவதற்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி தமிழக சட்டசபையில் தனித் தமிழீழம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலக தமிழர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும். இதையே தான் இலங்கைத் தமிழர்களும் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில் சிறிலங்கா அரசமைப்பின் 13 ஆவது சட்ட திருத்தம் கவலைக்குரியதாக உள்ளது.

தனித் தமிழீழம் அமைப்பது குறித்து எனவே, "13' ஆவது திருத்தத்தில் மாற்றங்களை சிறிலங்கா அரசு கொண்டு வராமல் தடுக்க இந்திய மத்திய அரசு அனைத்து வகையான நடவடிக்கையும், நெருக்கடிகளையும் கொடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக