siruppiddy

13/7/13

போர்க்குற்றவாளி படைகளுடன் அமெரிக்க படைகள் கூட்டுப்???

இனப் படுகொலைகளை மேற்கொண்ட சர்வதேச போர்க்குற்ற படையான சிறீலங்காவின் படைகளுடன் அமெரிக்க படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்ற நடவடிக்கையானது அமெரிக்காவின் இரட்டைவேடத்தை வெளிக்காட்டுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்ற போhக்குற்றம் தொடர்பான விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாகள் கண்டிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குற்றம் புரிந்த அந்தப் படைகளுடன் பயிற்சியில் ஈடுபடுவது, உலக நாடுகளையும் தமிழர்களையும் ஏமாற்றும் நடவடிக்கையாகும்.
அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு ஒன்று சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.   
கடந்த 2ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இந்தப் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. பிளாஸ் ஸ்ரைல் கூட்டுப் பயிற்சி என்ற பெயரில், ஆண்டு தோறும் நடத்தப்படும், போரல்லாத கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   
அமெரிக்க கடற்படையின் சிறப்புப் போர்முறைச் சமூகத்துடன், சிறிலங்கா ஆயுதப்படைகளின் சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்தும் இந்தப் பயிற்சி வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது.   
இதில், சிறிலங்கா கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி, சுழியோடிகள், துரித மீட்பு அணி, என்பனவும், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி அணியும், சிறப்புப் படைப்பிரிவும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக