siruppiddy

7/7/13

தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், என். சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் சிவநேசன் (பவன்) ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும், இடம்பெயர்ந்த வாக்காளர் பதிவுகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் தலா மூவர் வீதம் பதினைந்து பேரை உள்ளடக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை அமைப்பதென்று முன்னர் இணக்கம் காணப்பட்டிருந்த விடயத்தில் சிறு மாற்றமாக ஒவ்வொரு கட்சிக்கும் தலா நால்வர் வீதம் இருபது பேரும் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் அவர்களுமாக ஒருங்கிணைப்புக்குழுவில் மொத்தம் இருபத்தொரு பேராகவும் அதிகிரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.மற்றும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது எதிர்வரும் 11ம் திகதி சந்திப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த காலங்களிலும் தமிழ் கட்சிகளிடம் ஒற்றுமையின்மையினால்தான் எமது விடுதலை நோக்கிய போராட்டங்களும் பின்னடைவை நோக்கியுள்ளன.
இன்றை காலகட்டத்த எதிரி எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ப தமிழ் கட்சிகள் தமது செயற்பாடுகளில் ஈடுபடுவது எமது போராட்டத்தை மேலும் பின்னடைவைதான் ஏற்படுத்தும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக