siruppiddy

26/7/13

ஊடகர்களுக்கான கருத்தரங்கு என்ற பெயரில் அச்சுறுத்தல்!

பிரதேச ஊடகவியலாளர்களுக்கான அபிவிருத்தி தொடர்பில் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு என்ற பெயரில் சிறிலங்கா அரச தகவல் திணைக்களத்தால் கடந்த செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கின் மூலம் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலுக்கு யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களைவிட தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் இராணுவ அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். அதனை விட இராணுவ ஊடகவியலாளர்களும் இராணுவப் புலனாய்வாளர்களும் கூட அழைக்கப்பட்டிருந்தனர்.
யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கருத்தரங்கிற்கு இராணுவத்தினரும் இராணுவ ஊடகவியலாளர்களும் தென்னிலங்கை ஊடகவியலாளர்களும் அழைக்கப்பட்டதன் மர்மம் என்ன என்று கேள்வியெழுப்பியுள்ள யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் இதன் மூலம் தாங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அரச தகவல் திணைக்களத்தினால் கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு அடிக்கடி கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன. இந்தக் கருத்தரங்குகளில் இராணுவத்தினர் கலந்துகொள்வதில்லை. அத்துடன், யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களோ வன்னி ஊடகவியலாளர்களோ அழைக்கப்படுவதில்லை. ஆனால், யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிற்கு இராணுவ அதிகாரிகளும் இராணுவ, தென்னிலங்கை ஊடகவியாளாகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இங்கு கலந்துகொண்ட இராணுவ ஊடகவியலாளர்கள் நிகழ்வைப் புகைப்படம் எடுப்பது போன்று யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்களையும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் அரசுக்கு சார்பாகச் செயற்பட வேண்டுமென்று தாங்கள் மறைமுகமாக அச்சுறுத்தப்பட்டதாக தாங்கள் உணர்வதாகவும் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவற்றை விட, இந்த ஊடகவியலாளர் கருத்தரங்கில் யாழ்.அரச அதிபரே கதாநாயகன் பாத்திரம் ஏற்றிருந்தார். இங்கு கலந்துகொண்ட யாழ்.அரச அதிபர் யுத்தத்திற்கு பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தினால் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை வெண்திரையில் புகைப்படங்களுடன் எடுத்துக்காட்டி விளக்கமளித்தார். ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக அரச அதிபர் நின்றவாறு இந்த விளக்கவுரையை நிகழ்தினார். இந்த விளக்கவுரை தமிழ் மொழிக்கு அப்பால், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த அபிவிருத்தி குறித்த விபரங்களை தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மிக அவதானமாக வீடியோவில் பதிவுசெய்துகொண்டனர். யுத்தத்திற்கு பின்னர் யாழ்.குடாநாட்டில் பிரமிக்கத்தக்க அபிவிருத்தி நடைபெறுவதாக யாழ்.அரச அதிபர் கூறிய மேற்படி விபரங்கள் இனிமேல் தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் மூலம் தென்னிலங்கை மக்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பிரச்சாரம் செய்யப்படப்போகின்றது.
யாழில் இடம்பெறுகின்ற அபிவிருத்தி, எதிர்காலத்தில் இங்கு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி போன்ற விடயங்களை புள்ளிவிபரங்களுடன் எடுத்தியம்பிய அரச அதிபர், யாழ்.குடாநாட்டில் மீளக்குடியமர்த்தப்படவேண்டிய பொதுமக்களின் விபரங்கள், அவர்களை மீள்குடியேற்றி அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற விடயங்களை துளியளவேனும் தொட்டுக்காட்டவில்லை.
யாழ்.குடாநாட்டில் தமிழ் மக்களின் பெருமளவு ஏக்கர் கணக்கான நிலங்களை இராணுவத்தினர் சுவீகரித்து இராணுவ முகாம்கள் அமைத்து வருகின்ற நிலையில் இங்கு மீளக்குடியமர வேண்டிய லட்சக்கணக்கான மக்கள் நலன்புரி நிலையங்களில் ஏதிலிகளாக தவிக்கின்றனர். உரிய இருப்பிடம், வாழ்வாதார வசதிகள், பிள்ளைகளுக்கான கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் இன்றி கடந்த முப்பது வருங்களாக நலன்புரி நிலையங்களில் வாடுகின்ற மக்களைத் தவிர்;த்து யாழ்.குடாநாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை வேடிக்கையாக உள்ளதென்று யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்திற்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்தாகவும் இனிவரும் காலங்களில் இந்த அபிவிருத்தி மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அரச அதிபர் தெரிவித்திருந்தார். ஆனால், வலி.வடக்கில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலம் இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் முடங்கியுள்ளது. அதனைவிட புதிதாகவும் இராணுவம் விவசாய நிலங்களை சுவீகரித்து வருகின்றது.
மேலும், வலி.வடக்கில் மயிலிட்டிக் கடலில் யாழ்.குடாநாட்டு கடற்றொழிலாளர்கள் தொழில் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளாகின்ற நிலையிலும் இங்கு தொழில் செய்ய அனுமதிக்கப்படாமையால் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மிகவும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களைப் பற்றியோ இங்குள்ள வளம்மிகக் விவசாய பூமி மற்றும் கடல்வளம் தொடர்பாகவோ எந்தவித கருத்தையும் முன்வைக்காத அரச அதிபர் அடுத்த ஆண்டுக்குள் யாழ்.குடாநாட்டு விவசாயம் மற்றும் கடற்றொழில் ஆகிய பொருளாதாரத் துறைகளில் கடும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியிருந்தார். இவரின் இந்த விளக்கக் கருத்தரங்கு நகைப்புக்கு இடமாக அமைந்திருந்தது என்று இங்கு கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறிலங்கா அரசாங்கத்திடம் நல்ல பெயர் எடுப்பதற்காக யாழ்.அரச அதிபர் போன்ற தமிழ் அரச அதிகாரிகள் அரசாங்கத்திடம் மண்டியிடுவதானது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமாகவே கருதப்படும். இவர்கள் தங்கள் காலத்தில் நன்மைகளைச் செய்யாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் நின்று அரசாங்கத்திற்கு ஆதரவாக ஒத்து ஊதுகின்ற செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமென்று குடாநாட்டு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலத்தில் யாழ்.மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஊடகவியலாளர் சந்திப்புகளின் போது ஊடகவியலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும். வேண்டுமாயின் இராணுவ அதிகாhரிகளுக்கும் இராணுவ ஊடகவியலாளர்களுக்கும் தனியான ஊடக கருத்தரங்குகளை நடத்தலாம். அதைவிடுத்து தங்களுடன் இராணுவத்தினருக்கும் ஏற்பாடு செய்து தங்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க வேண்டாமென்றும் யாழ்.குடாநாட்டு ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக