siruppiddy

12/7/13

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டத்திலும்??


 தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம், இன்று பி.ப 5.00 மணிக்கு கொழும்பிலுள்ள கட்சியின் தலைமைச்செயலகத்தில் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில், வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில், கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு, தெரிவு தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் ஆனந்தசங்கரி இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாத நிலையில், விக்னேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இரா.சம்பந்தனும், மாவை.சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் ஏனைய கட்சி பிரதிநிதிகளும் விடாப்பிடியாக இருந்தனர்.
கூட்டமைப்பை ஒழுங்கமைப்பு ரீதியாக பலப்படுத்துவதற்காக ஒருங்கிணைப்புக்குழுவின் கீழான தேர்தல் குழு, நிதிக்குழு, பிரசாரக்குழு ஆகியன உருவாக்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் குழுவுக்கு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் இரண்டு நபர்கள் வீதம் பத்து நபர்களும், நிதி மற்றும் பிரசாரக்குழுக்களுக்கு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா ஒருவர் வீதம் ஐவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்யும் நோக்கோடு நாளை காலை 10.00 மணிக்கு ஒருங்கிணைப்புக்குழு மறுபடியும் கூடுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக