siruppiddy

24/7/13

பொதுத்துறை பலவீனமான நிலையில் ??



நாட்டின் பொதுத்துறை பலவீனமான நிலையில் காணப்படுவதாக பொது முயற்சியான்மை குறித்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணேசேகர தலைமையில் இந்தக் குழு நேற்றைய தினம் பாராளுமன்றில் அறிக்கையை சமர்ப்பித்திருந்து.

பொதுத்துறை நிறுவனங்கள் நட்டமடைவதற்கான காரணங்கள் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொதுத்துறை சேவைகள் வீழ்ச்சியடைவதனை தடுப்பதற்கு பொதுத்துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 16 அரச நிறுவனங்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் எயார், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை சேவையின் தொழில்சார் நிலைமையை மேம்படுத்த வேண்டும் எனவும் அதற்கு தற்போதைய சம்பள முறைமைகள் வழியமைக்காது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காத்திரமான சேவைகளைப் பெற்றுக்கொள்ள சிறந்த தொழில்சார் தகமையுடையவர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அவர்களுக்கு நியாயமான சம்பளங்கள் வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக