siruppiddy

1/7/13

சிறிலங்காவை மிரட்ட தூது அனுப்பவுள்ள இந்தியா!


சிறிலங்காவின் சமகால அரசியல் நடவடிக்கையால் இந்திய அரசாங்கம் அதிருப்தி அடைந்துள்ளதாக புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
   இதன் விளைவாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தி சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ஷக்கு அவசர அழைப்பினை இந்தியா விடுத்துள்ளது.
  எதிர்வரும் ஏழாம் திகதி கொழும்பில் நடக்கவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு செல்லவுள்ளார்.
  அதற்கு முன்னதாக, பசில் ராஜபக்ச மூலம் கடுமையான செய்தி ஒன்றை கொழும்புக்கு அனுப்பவே அவரை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளதாக புதுடெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள் தொடர்பாக கவலையடைந்துள்ள இந்தியா, இதுதொடர்பான கலந்துரையாடவே பசில் ராஜபக்சவை புதுடெல்லிக்கு அழைத்துள்ளது.
   காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையோ, பிரதமர் மன்மோகன் சிங்கையோ அவர் சந்திப்பது உறுதியாகவில்லை.
  சிவ்சங்கர் மேனன் கொழும்பு செல்வதற்கு முன்னர், கடுமையான தகவல் ஒன்றை பசில் ராஜபக்ச மூலம் கொழும்பு அனுப்பவே இந்தியா அவரை அழைத்துள்ளதாகவும் புதுடெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்றும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது.
  அதேவேளை, புதுடெல்லியில் தாம், சல்மான் குர்ஷித்தையும், சிவ்சங்கர் மேனனையும் சந்திக்கவே ஏற்பாடாகியுள்ளது என்பதை பசில் ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  எதிர்வரும் நான்காம் திகதி பசில் ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளார்
   புதுடெல்லியில் பசில் ராஜபக்சவை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனும் சந்திக்கவே ஏற்படாகியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக