siruppiddy

12/7/13

சிறீலங்கா அரசு தேர்தலில் வெற்றிபெறவுள்ளதாக


ஸ்ரீலங்காப் படையினரையும் ஆயுதக் குழுக்களையும் பயன்படுத்தி வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் முற்படுவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்பு ஒன்று கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதநிதிகளிடம் முறையிட்டது.
மேலதிக ஸ்ரீலங்காப் படையினர் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் குவிக்கப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் நடமாடுவதாகவும் அந்த அமைப்பு முறைப்பாட்டில் குறிப்பிடுகிறது.
அரசாங்கத் தரப்பு வேட்பாளர்களுக்கு மாத்திரம் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் தமிழத்தேசிய கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக போட்டியிடவுள்ள கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு அச்சறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு முறையிட்டதென ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு அந்த அமைப்பின் பெயரை வெளியிட முடியாதென கூறிய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி, மேலும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தால் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக