siruppiddy

1/7/13

சர்வதேசத்தை ஏமாற்றிய மஹிந்த!

  
 வட தமிழீழத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவது குறித்து தாம் சர்வதேச சமூகத்துக்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
   சிஷெல்ஸ் தீவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த அந்நாட்டு ஜனாதிபதி ஜேம்ஸ் மிச்சேலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
  இதன்போது முக்கிய மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டன.
  விமான சேவை, தொழிற் பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி, பாதுகாப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
  இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட மஹிந்த,
  "30 ஆண்டுகளாக நீடித்த போர் இப்போது முடிந்து விட்டது. சிறிலங்கா இப்போது அமைதியையும், உறுதிநிலையையும் அனுபவிக்கிறது.
  வடக்கு மாகாணசபைக்குத் திட்டமிட்டபடி இந்த ஆண்டில் தேர்தல் நடத்தப்படும்.
  சர்வதேச சமூகத்துக்கு அல்ல, எனது நாட்டு மக்களுக்கு நான் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளேன்.
  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
  வடக்கிற்கு அபிவிருத்திக்காக மட்டும் 300 மில்லியன் டொலரை சிறிலங்கா அரசாங்கம் செலவிட்டுள்ளது.“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிலெஷ்ஸ் நாட்டு ஜனாதிபதி ஜேம்ஸ் மிசேல்,
  சிறிலங்காவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டுக்கு பூரண ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். அத்துடன் சர்வதேச அரங்கில் ஏற்படும் அழுத்தங்களின் போது சிறிலங்கா அரசுக்கு சாதகமாக செயற்படுவதாக உறுதி அளித்துள்ளார்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக