siruppiddy

1/7/13

வடதமிழீழத்தில் ஆட்சியை கைப்பற்ற சிறிலங்கா சதி முயற்சி!


வடதமிழீழத்தில் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதன் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற பல சதி முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அங்கிருந்த வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
   இதற்கமைய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு  தமிழ் அரசியல் கைதிகளை தேர்தல் களத்தில் இறக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  வெலிக்கடை, மகசீன் மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளி்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை தேர்தலில் போட்டியிடுமாறு புலனாய்வு துறையினர் வலியுறுத்துவதாக கூறப்படுகின்றது.
  தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக சுயேற்சைக் குழுவில் போட்டியிடுமாறு ஆலோசணை வழங்குவதாகவும் தேவையான நிதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் புலனாய்வு துறையினர் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது.
  அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸில் 1989ஆம் ஆண்டு போட்டியிட்ட நல்லதம்பி செல்லத்துரை, 2010ஆம் ஆண்டு மாம்பளம் சின்னத்தில் சுயேற்சையாக போட்டியிட்ட மதனராஜா ஆகிய இருவரும் தற்போது சிறையி்ல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
  இவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக புலனாய்வுத்துறையினர் உறுதியளித்துள்ளதாக குறித்த தமிழ் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
  அத்துடன், வேறும் கைதிகளுடனும் பேரம் பேசப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்ட முகவர்களே சிறைச்சாலைகளுக்கு சென்று பேசி வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக