siruppiddy

16/7/13

தேர்தலை: தடுத்து நிறுத்த கடும்போக்குவாத அமைப்புகள்


 வட தமிழீழத்தில் வரும் செப்டம்பர் மாத இறுதியில் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அதனை  தடைசெய்யும் வகையில் முயற்சியில் இனவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.
குறித்த தேர்தலை நிறுத்துவதற்கான இடைக்கால தடை உத்தரவினை நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட சிங்கள அமைப்புகளும் கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாக நம்பமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முயற்சியில் சிங்கள ராவய, பொதுபலசேனா அமைப்புகள் உட்பட மற்றும் சில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு முன்னராக குறித்த தேர்தலை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனை ஆட்சேபித்து நீதிமன்றத்தின் ஊடாக இடைக்காலத் தடை ஒன்றினைப் பெற்றுக் கொள்ள இவை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் கொண்டதாக தற்போது நடைமுறையிலுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழர் தாயகப் பகுதிகளில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் ஏனைய மாகாண சபைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் சாத்தியம் உள்ளன.

இவ்வாறானதொரு நிலையில் வட தமிழீழத்தில் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத்தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென இந்த அமைப்புகளும் கடசிகளும் நீதிமன்றத்தின் ஊடாகக் கோரவுள்ளன எனக் கூறப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக